நேசிப்பாயா வெளியீட்டுத் தேதி!
இயக்குநர் விஷ்ணு வரதன் இயக்கிய நேசிப்பாயா படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
மறைந்த நடிகர் முரளியின் இளைய மகனான ஆகாஷ் முரளி அறிமுகமாகும் படத்தை விஷ்ணு வரதன் இயக்கி வருகிறார். ‘நேசிப்பாயா’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் நாயகியாக அதிதி ஷங்கர் நடித்துள்ளார்.
காதலை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இதையும் படிக்க: குட் பேட் அக்லி வெளியீட்டுத் தேதி இதுதானா?
மறைந்த நடிகர் முரளியின் இளைய மகனான ஆகாஷ் முரளி, நாயகனான அறிமுகமாகும் படமென்பதால் படத்தின் டீசர் கவனம் பெற்றது.
இந்த நிலையில், இப்படம் பொங்கல் வெளியீடாக ஜன. 14 ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.