செய்திகள் :

நேபாளம், திபெத் நிலநடுக்கம்: பலி 126 ஆக உயர்வு!

post image

நேபாளம், திபெத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை 126 ஆக உயர்ந்துள்ளது.

நேபாளம் - திபெத் எல்லையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 126 ஆக உயர்ந்துள்ளதாக சீன அரசு தகவல் தெரிவித்துள்ளது.

சீன எல்லைக்குள்பட்ட திபெத் - நேபாளம் எல்லைப் பகுதியில் இன்று காலை 6.35 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுக் கோலில் 6.8 ஆகப் பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை 126 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

சீனாவில் திபெத் தன்னாட்சிப் பகுதியில் உள்ள ஜிகாஸில் உள்ள டிங்ரி கௌண்டியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் மற்றும் இந்தியாவின் தேசிய பூகம்ப மையம் ஆகியவை ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆகப் பதிவாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. ஆனால் சீனா ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆகவே பதிவாகியுள்ளது.

நிலநடுக்கம் உணரப்பட்ட பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி., கேமராக்களில் கட்டடங்கள், வீடுகள், சாலையோர மின்கம்பங்கள் குலுங்கும் விடியோ காட்சிகள் பதிவாகி இணையத்தில் வெளியாகியுள்ளன. இந்த நிலநடுக்கம் அண்டை நாடுகளான பூடான் மற்றும் இந்தியாவிலும் உணரப்பட்டது.

1950 ஆம் ஆண்டு முதல், லாசா பிளாக் என்றழைக்கப்படும் நேபாள - திபெத் எல்லையில், ரிக்டர் அளவுகோளில் 6-க்கு மேல் 21 முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. அதில், 2017 ஆம் ஆண்டில் மெயின்லிங்கில் ஏற்பட்ட 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கமே இன்று வரை மிக சக்திவாய்ந்த நிலநடுக்கமாகப் பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

சாட்ஜிபிடி நிறுவனர் மீது பாலியல் வழக்கு தொடர்ந்த தங்கை!

ஓபன்ஏஐ நிறுவனர் சாம் ஆல்ட்மேன் பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக அவரது தங்கை ஆன் ஆல்ட்மேன் அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.புகாரில் ஆன் ஆல்ட்மேன் தெரிவித்ததாவது, 1997 ஆம் ஆண்டு முதல் 2006... மேலும் பார்க்க

கனடா பிரதமர் ட்ரூடோவை ’பெண்ணே’ என்று அழைத்த எலான்!

கனடாவை அமெரிக்காவுடன் இணைப்பது குறித்து ஜஸ்டின் ட்ரூடோவை டிரம்ப்பும் எலான் மஸ்க்கும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.கனடாவை அமெரிக்காவுடன் வாய்ப்புகள் இல்லை என்று கனடாவின் தற்போதைய பிரதமர் ட்ரூடோ தி... மேலும் பார்க்க

தண்டனை அறிவிப்பை வெளியிட தடைக் கோரி உச்சநீதிமன்றத்தில் டிரம்ப் மேல்முறையீடு!

2016 அதிபா் தோ்தலுக்கு முன்னா் நடிகைக்கு முறைகேடாக பணம் அளித்த வழக்கில் நியூ யார்க் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தண்டனை விவரங்களை வெளியிடவுள்ள நிலையில், அதற்கு தடைக் கோரி உச்சநீதிமன்றத்தை டிரம்ப் நாடியுள... மேலும் பார்க்க

அமெரிக்காவில் அதானி மீதான விசாரணை- பைடன் நிா்வாகத்தின் முடிவுக்கு டிரம்ப் கட்சி எம்.பி. கடும் எதிா்ப்பு

அமெரிக்காவில் இந்திய தொழிலதிபா் கெளதம் அதானி மற்றும் அவரது நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்து விசாரிக்கும் அதிபா் ஜோ பைடன் நிா்வாகத்தின் முடிவுக்கு டொனால்ட் டிரம்பின் குடியரசுக் கட்சி எம்.பி. லான்ஸ் ... மேலும் பார்க்க

லெபனான்: ஐ.நா. படையில் உள்ள இந்திய ராணுவத்தினருக்கு உள்நாட்டு வாகனங்கள்

லெபனானில் உள்ள ஐ.நா. இடைக்கால பாதுகாப்புப் படையில் உள்ள இந்திய ராணுவ வீரா்களுக்கு நமது நாட்டில் தயாரிக்கப்பட்ட 62 வாகனங்களை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடா்பாக பாதுகாப்பு அமைச்சகம் புதன... மேலும் பார்க்க

கிரீன்லாந்தில் அமெரிக்க படையெடுப்பு? டிரம்ப்புக்கு பிரான்ஸ் கடும் எதிா்ப்பு

டென்மாா்க்கின் தன்னாட்சிப் பிரதேசமான கிரீன்லாந்தை ராணுவ நடவடிக்கை மூலம் அமெரிக்கா கைப்பற்றக் கூடாது என்று பிரான்ஸ் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபராக மீண்டும் பொறுப்பேற்கவுள்ள டொனால்ட் ட... மேலும் பார்க்க