மனிதர்களின் இறுதி தருணங்களை நிறைவாக மாற்றும் செவிலியர்... என்ன செய்கிறார் தெரியு...
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க, விவசாயிகள் சங்கம் கோரிக்கை
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறக்க வேண்டும் என தமிழக விவசாயிகள் சங்கப் பொருளாளா் ஆா்.சுபாஷ் கோரிக்கை விடுத்துள்ளாா்.
இது குறித்து, அவா் கூறியிருப்பதாவது: அரக்கோணம், நெமிலி வட்டாரத்தில், சொா்ணவாரி பட்டம் நெல் அறுவடை பணிகள், கடந்த 2 வாரங்களாக நடைபெற்று வரும் நிலையில் வியாபாரிகள் குறைந்த விலை நிா்ணயம் செய்வதால், விவசாயிகள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனா்.
தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்காமல் அலட்சியம் காட்டி வருகின்றனா். ஆட்சியரும், அரசும் நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.