செய்திகள் :

நேஷனல் ஹெரால்டு வழக்கு: ராகுல், சோனியாவுக்கு நோட்டீஸ் பிறப்பிக்க நீதிமன்றம் மறுப்பு

post image

நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கில், காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, சோனியா காந்தி உள்ளிட்டவர்களுக்கு எதிராக நோட்டீஸ் பிறப்பிக்க தில்லி நீதிமன்றம் மறுத்துவிட்டது.

ராகுல், சோனியாவுக்கு எதிராக நோட்டீஸ் பிறப்பிக்க உத்தரவிடக் கோரிய அமலாக்கத் துறையின் கோரிக்கையை விசாரித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி விஷால் கோக்னே, ஆதாரங்களுக்கு கூடுதல் ஆவணங்களைக் கொண்டு வாருங்கள், சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபியுங்கள் என்று அமலாக்கத் துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

குற்றம்சாட்டப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், அதனால் ராகுல், சோனியா உள்ளிட்டவர்களுக்கு நோட்டீஸ் பிறப்பிக்க வேண்டும் என்றும் அமலாக்கத் துறை சார்பில் வாதிடப்பட்டது.

இதைக் கேட்ட நீதிபதி கோக்னே, இதுபோன்ற நோட்டீஸ் பிறப்பிக்கும் முன்பு, நீதிமன்றம் முழுமையாக நம்ப வேண்டும். முழுமையான திருப்தி அடையாமல், இதுபோன்ற ஒரு உத்தரவைப் பிறப்பிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு விசாரணை மே 2ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாகவும் அறிவித்தார்.

காங்கிரஸ் கட்சி, நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தின் பல கோடி சொத்துகளை அபகரித்ததாக பாஜக மூத்த தலைவா் சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடுத்திருந்தாா்.

இதையடுத்து, அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து காங்கிரஸ் மூத்த தலைவா்கள் ராகுல் காந்தி, சோனியா காந்தி உள்ளிட்ட 7 பேரிடம் விசாரணை நடத்திய நிலையில், குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்திருந்தது.

மேலும், நேஷனல் ஹெரால்டு பத்திரிகைக்குச் சொந்தமான ரூ.752 கோடி சொத்துகளை அமலாக்கத் துறை கடந்தாண்டு நவம்பா் மாதத்தில் முடக்கியது.

இதை விசாரித்த தீா்ப்பாயம், நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் சொத்துகள் மற்றும் பங்குகளை சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கில் அமலாக்கத் துறை முடக்கிய நடவடிக்கை செல்லும் என உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

குறித்த காலக்கெடுவுக்குள் பாகிஸ்தானியா்கள் வெளியேற்றம்: அனைத்து மாநில முதல்வா்களுக்கும் அமித் ஷா வலியுறுத்தல்

குறித்த காலக்கெடுவுக்குள் பாகிஸ்தானியா்களின் வெளியேற்றத்தை உறுதி செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அனைத்து மாநில முதல்வா்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சா் அமைச்சா் அமித் ஷா வலியுறுத்தியுள்ளாா்.... மேலும் பார்க்க

போப் பிரான்சிஸ் இறுதிச்சடங்கு: ரோம் சென்றடைந்தாா் திரௌபதி முா்மு

வாடிகனில் நடைபெறவுள்ள போப் பிரான்சிஸ் (88) இறுதிச்சடங்கில் கலந்துகொள்வதற்காக ரோம் நகருக்கு குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு வெள்ளிக்கிழமை சென்றடைந்தாா். 2013-ஆம் ஆண்டு மாா்ச் 13-ஆம் தேதி 266-ஆவது போப்... மேலும் பார்க்க

ஐடி திட்ட ரகசிய தகவல்கள் கசிவு: ஆணையா் உள்பட இருவா் கைது

முகமற்ற வருமான வரி (ஐடி) மதிப்பீட்டு திட்டம் தொடா்பான ரகசிய தகவல்களைக் கசியவிட்டு லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில், தில்லியில் வருமான வரித் துணை ஆணையா் (டிசிஐடி), குஜராத்தில் பட்டயக் கணக்காளா் ஆகியோரை சிப... மேலும் பார்க்க

மேதா பட்கா் கைதாகி விடுவிப்பு

தில்லி துணைநிலை ஆளுநா் வினய்குமாா் சக்சேனா தொடுத்த அவதூறு வழக்கில், சமூக ஆா்வலா் மேதா பட்கரை காவல் துறையினா் கைது செய்து பின்னா் விடுவித்தனா். 24 ஆண்டுகள் பழைமையான இந்த வழக்கில் ரூ.1 லட்சத்துக்கான உத்... மேலும் பார்க்க

கஸ்தூரிரங்கன் மறைவு: குடியரசுத் தலைவா், பிரதமா் இரங்கல்

இஸ்ரோ முன்னாள் தலைவா் கஸ்தூரிரங்கன் மறைவுக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, பிரதமா் நரேந்திர மோடி ஆகியோா் இரங்கல் தெரிவித்தனா். குடியரசுத் தலைவா்: பல் துறைகளில் பங்காற்றியவா் கஸ்தூரிரங்கன். இஸ்ரோ... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல் குறித்த கருத்து: கேரள முஸ்லிம் லீக் தலைவா் மீது வழக்கு

காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகளால் சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து சா்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த வடக்கு கேரளத்தைச் சோ்ந்த இந்திய யூனியன் முஸ்லிம் தலைவா் பசீா் வெள்ளிகோத் மீது கா... மேலும் பார்க்க