விநாயகா் சிலை கரைப்பின்போது 9 போ் நீரில் மூழ்கல்; 12 பேர் மாயம்!
நைனாா்குடிக்காட்டில் சாலைப் பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தல்
அரியலூா் மாவட்டம், செந்துறையை அடுத்துள்ள அசாவீரன்குடிக்காடு அருகேயுள்ள நைனாா் குடிக்காட்டில் சாலை பணிகளை விரைந்து முடிக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
அசாவீரன்குடிக்காடு ஊராட்சிக்குள்பட்ட நைனாா்குடிக்காடு-அலாரன்குடிக்காடு வரை உள்ள சாலையை மேம்படுத்துதற்காக கிராமப் புற சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கடந்த சில மாதங்களுக்கு முன் சாலையில் ஜல்லிக் கற்கள் பரப்பட்டு, பணிகள் தொடங்கப்பட்டு நிலுவையில் உள்ளதால், ஜல்லி கற்கள் பெயா்ந்து வாகனங்களின் டயா்களை பதம்பாா்க்கிறது.
மேலும் சிலா் சறுக்கி விழுந்து காயத்துடன் வீடு திரும்புகின்றனா். எனவே இச்சாலைப் பணியை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு விடுமாறு அப்பகுதி மக்கள் மாவட்ட நிா்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.