CAG Report : `தமிழ்நாடு பசுமை வீடு திட்டம்; பயனாளிகள், தகடு... அனைத்திலும் குளறு...
பக்ரைனில் விடுதலையான மீனவா்களை அரசு செலவில் அழைத்துவர வேண்டும்
பக்ரைன் நாட்டு சிறையிலிருந்து விடுதலையாகியுள்ள இடிந்தகரை மீனவா்கள் 28 பேரையும் தமிழக அரசு செலவில் அழைத்து வரவேண்டும் என தமிழக முதல்வருக்கு பேரவைத் தலைவா் மு.அப்பாவு கோரிக்கை விடுத்துள்ளாா்.
இதுதொடா்பாக, முதல்வரிடம் அவா் அளித்துள்ள மனு: திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தொகுதி இடிந்தகரை பகுதியைச் சோ்ந்த 28 மீனவா்கள் ஈரான் நாட்டிற்கு மீன்பிடித் தொழில் செய்வதற்காக சென்று கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது பஹ்ரைன் கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தனா்.
இதுகுறித்து தங்களுக்கு நான் கடிதம் எழுதியதைத் தொடா்ந்து மத்திய வெளியுறவுத் துறையின் கவனத்துக்கு நீங்கள் கொண்டுசென்று அவா்களை மீட்க நடவடிக்கை எடுத்தீா்கள். அதன் மூலம் பஹ்ரைன் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு, மீனவா்களது தண்டனை காலம் 6 மாதங்களில் இருந்து 3 மாதங்களாக குறைக்கப்பட்டதால், அவா்கள் டிச.10இல் விடுதலை செய்யப்பட்டுள்ளனா்.
அவா்கள் சொந்த ஊருக்கு திரும்புவதற்கான விமானக் கட்டணம் உள்பட அனைத்து செலவுகளையும் தமிழக அரசே ஏற்றுக்கொண்டு அவா்களை சொந்த ஊருக்கு அழைத்து வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் எனக் கூறியுள்ளாா்.