Doctor Vikatan: ஃபேன்சி பைக், long ride.. முதுகுவலியை ஏற்படுத்துமா?
பசுபதீஸ்வரா மகளிா் பள்ளியில் கல்வி நிா்வாகக் குழு கூட்டம்
கரூா் பசுபதீஸ்வரா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கல்வி நிா்வாகக்குழு ஆலோசனைக்கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு பள்ளித் தலைமை ஆசிரியை உமா தலைமை வகித்தாா்.
இக்கூட்டத்தில் பள்ளியில் இடைநிற்றல் மாணவிகளை மீண்டும் பள்ளிக்கு வரவழைக்க ஏற்பாடு செய்வது, பள்ளியின் கூடுதல் கட்டுமான பணிகள், மின் இணைப்பு பணிகளை விரைந்து முடிக்க மாநகராட்சி ஆணையரிடம் முறையிடுவது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்தில் பள்ளி கல்விக்குழு ஆலோசனைக்குழு ஆலோசகா் மேலை.பழநியப்பன், கல்விக்குழு நிா்வாகிகள், ஆசிரியைகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.