செய்திகள் :

பஞ்சமி நிலம்: ஓபிஎஸ் நிலப்பட்டா ரத்து... எஸ்சி, எஸ்டி ஆணையம் வழங்கிய அதிரடி உத்தரவு என்ன?

post image
தேனியில் பஞ்சமி நிலத்தை முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது அதிகாரத்தை பயன்படுத்தி வாங்கியதாக கூறி, அந்நிலத்திற்கான பட்டாவை ரத்து செய்யுமாறு சென்னை எஸ்சி, எஸ்டி ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 1991ம் ஆண்டு  தேனி, ராஜா களம் பகுதியில் உள்ள 40 சென்ட் பஞ்சமி நிலத்தை, மூக்கன் என்பவருக்கு ஆதிதிராவிட நலத்துறை வழங்கி இருக்கிறது.  இந்த நிலத்தை 15 ஆண்டுகளுக்கு வேறு யாருக்கும் உரிமை மாற்றம் செய்யக் கூடாது என்றும், அதன் பிறகும் அந்த நிலத்தை பட்டியலினத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே ஒதுக்க முடியும் என்றும் நிபந்தனை உள்ளது.

ஓ. பன்னீர்செல்வம்
ஓ. பன்னீர்செல்வம்

இதனை மீறி, கடந்த 2008-ம் ஆண்டு இந்த நிலத்தை பட்டியலினத்தைச் சாராத ஹரி சங்கர் என்பவருக்கு மூக்கன் எழுதிக் கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அவரிடமிருந்து, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இந்நிலத்தை வாங்கி, தனது பெயரில் பட்டா வாங்கியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக மூக்கனின் மகன் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் மாநில பட்டியலின மற்றும் பழங்குடியினத்தவர் ஆணையத்தில் புகார் அளித்தனர்.

இப்புகாரை விசாரித்த சென்னையில் உள்ள மாநில எஸ்சி, எஸ்டி ஆணையம், பஞ்சமி நிலத்தை முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி வாங்கியதற்கு ஆதாரங்கள் உள்ளதாகக் கூறி, அந்த நிலத்துக்கு அவர் பெயரில் வழங்கப்பட்ட பட்டாவை அரசு ரத்து செய்ய உத்தரவிட்டது.

ஓ. பன்னீர்செல்வம்
ஓ. பன்னீர்செல்வம்

முறையற்ற வகையில், நிலத்தை மாற்றிக் கொடுத்த தாசில்தார், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை அதிகாரி ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆணையம், அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் பஞ்சமி நிலங்கள் எஸ்சி, எஸ்டி அல்லாத சிலருக்கு விற்கப்பட்டது சம்பந்தமாக பல்வேறு புகார்கள் எழுந்துள்ள நிலையில் ஓபிஎஸ் பெயரில் பெறப்பட்ட பட்டாவை ரத்து செய்ய எஸ்சி – எஸ்டி ஆணையம் உத்தரவிட்டுள்ளது தேனி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

Prashant Kishor: அப்பாவின் ஆசை; ஐ.நா சபை பணி; மோடி அலை; விஜய்யுடன் மீட்டிங் - பி.கே கடந்து வந்த பாதை

2014 - ஒரு முன்னுரை2014 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக பிரசாரம் பரபரப்பாக நடந்துகொண்டிருந்த நேரம் அது. நான் 10 ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். `இந்தியாவுலயே நம்பர் 1 மாநிலமா குஜராத்தை மாத்தியிர... மேலும் பார்க்க

`அத்திக்கடவு – அவினாசி திட்டத்திற்கு உரிமை கொண்டாட யாருக்கும் தகுதியில்லை!' - சாடும் ஓபிஎஸ்

'மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களால் வித்திடப்பட்ட அத்திக்கடவு – அவினாசி திட்டத்திற்கு உரிமை கொண்டாட யாருக்கும் தகுதியில்லை' என்று எடப்பாடியை சாடி ஓ.பன்னீர் செல்வம் அறிக்கை ஒன்றை வெ... மேலும் பார்க்க

`சமண சமயத்தினருக்கு சொந்தமான திருப்பரங்குன்றம்’ - உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் புதிய மனு

திருப்பரங்குன்றம் விவகாரம்கடந்த சில நாள்களாக திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தர்ஹாவில் வழிபடுவது குறித்து இரண்டு மதங்களைச் சேர்ந்த அமைப்பினர் பல்வேறு கருத்துகளை தெரிவித்தும் போராட்டமும் நடத்தி வருகிறார்... மேலும் பார்க்க

Vijay: `பணக்கொழுப்பு; தனிப்பட்ட விருப்பம்'- விஜய் - PK சந்திப்புக்கு அரசியல் கட்சிகளின் ரியாக்சன்

தவெக தலைவர் விஜய்யும் தேர்தல் வியூக வகுப்பாளரான பிரஷாந்த் கிஷோரும் சமீபத்தில் சந்தித்து முக்கியமான ஆலோசனையில் ஈடுபட்டிருந்தனர். பிரஷாந்த் கிஷோர் விஜய்யின் கட்சிக்காக வியூகங்களை வகுத்துக் கொடுக்கவிருப்... மேலும் பார்க்க

செங்கோட்டையன் : `பொதுச்செயலாளர் பெயரை களங்கப்படுத்த திமுக திட்டமிட்டு செயல்படுகிறது' - செல்லூர் ராஜூ

அத்திக்கடவு - அவினாசி திட்டத்திற்கு நிதி ஒதுக்கியதற்காக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கோவை மாவட்டத்தில் விவசாய சங்கத்தினர் நடத்திய பாராட்டு விழாவில் எம்ஜிஆர், ஜெயலலிதா படங்கள் வைக்கவில்லை... மேலும் பார்க்க

TVK: ``தவெக-வில் இருப்பவர்கள் அனைவருமே குழந்தைகள்தான்"-அண்ணாமலை

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் விவகாரத்தைத் தொடர்ந்து, தன்னைத்தானே சாட்டையால் அடித்துக்கொண்டு 48 நாள் விரதத்தைத் தொடங்கியிருப்பதாகத் தெரிவித்தார்.இந்நிலையில் 48 நாட்கள் வ... மேலும் பார்க்க