செய்திகள் :

பஞ்சாப் முதல்வரை சந்தித்து நலம் விசாரித்தார் மணீஷ் சிசோடியா!

post image

ஆத் ஆம் கட்சித் தலைவர் மணீஷ் சிசோடியா பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானை நேரில் சந்தித்து உடல்நலம் குறித்துக் கேட்டறிந்தார்.

முதல்வர் பகவந்த் மான்(51) சோர்வு மற்றும் குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக வெள்ளிக்கிழமை மாலை மொஹாலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முதல்வர் பகவந்த் மான் தற்போது மருத்துவக் கண்காணிப்பில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த மூன்று நாள்களாக முதல்வர் பகவந்த் மான் உடல்நிலை சரியில்லாமல் இருந்தாக சிசோடியா செய்தியாளர்களிடம் கூறினார்.

முன்னதாக, அவர் வீட்டில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று மாலை, அவரது நாடித்துடிப்பு குறைந்த நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவ கண்காணிப்பில் உள்ளார் என்றும், அவரது நிலைமை தற்போது சீராக இருப்பதாகவும், கவலைப்பட அவசியமில்லை. மருத்துவர்கள் கூற்றுப்படி அவர் ஓரிரு நாள்கள் மருத்துவமனையில் இருப்பார் என்று அவர் கூறினார்.

முதல்வர் பகவந்த் மான் பஞ்சாபில் வெள்ள நிலைமை குறித்து சிசோடியாவிடம் கேட்டறிந்தார். வெள்ளிக்கிழமை, முதல்வர் தலைமையில் நடைபெறவிருந்த பஞ்சாப் அமைச்சரவைக் கூட்டம் அவர் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் ஒத்திவைக்கப்பட்டது.

AAP leader Manish Sisodia on Saturday met Punjab Chief Minister Bhagwant Mann at a private hospital in Mohali and enquired about his health.

குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: பொறியாளர் ரஷீத் வாக்களிக்க அனுமதி!

ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லாவைச் சேர்ந்த மக்களவை எம்.பி. பொறியாளர் ரஷீத் செப்டம்பர் 9 ஆம் தேதி நடைபெறும் குடியரசுத் துணைத் தல்வர் தேர்தலில் வாக்களிக்க தில்லி உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மேலும் பார்க்க

ஜிஎஸ்டி சீர்திருத்தம்: மேலும் பல சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் -நிர்மலா சீதாராமன்

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி 2.0) சீா்திருத்தத்தைத் தொடர்ந்து, மேலும் பல சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். தற்போதுள்ள 5%, 12%, 18%... மேலும் பார்க்க

தொடர் மழை, நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட ஹிமாசல்: 360 பேர் பலி, 1001 சாலைகள் மூடல்!

ஹிமாசலப் பிரதேசம் தொடர்ந்து கடுமையான பருவமழையின் தாக்கத்தால் தத்தளித்து வருகிறது. இந்த பருவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 360 ஆக உயர்ந்துள்ளது. பருவமழை தொடங்கியதில் இருந்து ஹிமாச்சலில் பல்வேறு பாத... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி குறைப்பு: எந்தெந்த கார்களின் விலை எவ்வளவு குறையும்?

ஜிஎஸ்டி வரி குறைப்பினால் வாகனங்களின் விலை குறிப்பாக கார்களின் விலை கணிசமாகக் குறைய வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். கடந்த செப். 3 ஆம் தேதி தில்லியில் மத்திய நிதியமைச்சா் நிர்மலா சீதாராமன் தலைமை... மேலும் பார்க்க

மூளையைத் தின்னும் அமீபா: கேரளத்தில் மேலும் ஒருவர் பலி!

கேரளத்தில் மூளையைத் தின்னும் ஆமிபா தொற்றால் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளனர். கேரளத்தில் மூளையைத் தின்னும் அமீபா(Naegleria fowleri) எனும் அமீபிக் மூளைக்காய்ச்சல்(primary amoebic meningoencephalitis) என்... மேலும் பார்க்க

தேனிலவுக் கொலை: சோனம் முக்கிய குற்றவாளி! 790 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்!!

நாட்டையே உலுக்கிய மேகாலயா தேனிலவுக் கொலை வழக்கில், சிறப்பு விசாரணைக் குழுவினர், விசாரணையை முடித்து, 790 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர்.ராஜா ரகுவன்ஷி கொலை வழக்கில், அவரது மனைவி... மேலும் பார்க்க