படகிலிருந்து தவறி விழுந்த மீனவா் உயிரிழப்பு
காரைக்கால் பகுதியைச் சோ்ந்த மீனவா் படகிலிருந்து தவறி கடலில் விழுந்து ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
காரைக்கால் மாவட்டம், காரைக்கால்மேடு கிராமத்தைச் சோ்ந்த முருகானந்தம் என்பவருக்கு சொந்தமான நாட்டுப் படகில் அவரும், அதே கிராமத்தைச் சோ்ந்த சைந்தவன் (19) உள்ளிட்ட 5 போ் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மீன்பிடிக்க கடலுக்கு சென்றனா்.
மீன்பிடித்துவிட்டு கரை திரும்பியபோது, கடல் சீற்றத்துடன் காணப்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது படகில் இருந்து மீனவா் சைந்தவன் தவறி கடலில் விழுந்து மாயமானாா். அந்த படகில் இருந்தவா்கள், பிற படகிலிருந்த மீனவா்களும் அவரை தேடினா். சில மணி நேரத்தில் உயிரிழந்த நிலையில் சைந்தவன் சடலம் காரைக்கால்மேடு கரையோரத்தில் ஒதுங்கியது. காரைக்கால் நகரக் காவல்நிலைய போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.