செய்திகள் :

``படத்தை வைத்து திமுக நிர்வாகி என்று சொல்ல முடியாது; சிபிஐ விசாரணை தேவையற்றது'' -அமைச்சர் முத்துசாமி

post image

ஈரோட்டில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் வீட்டுவசதித் துறை அமைச்சர் சு.முத்துசாமி கலந்துகொண்ட பின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, அவர் பேசுகையில், "அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் துன்புறுத்தலுக்குள்ளான விவகாரத்தில் தமிழக அரசின் மீது குற்றம் சொல்ல முடியாத அளவுக்கு உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளோம். இது அரசின் தவறு என்று சொல்வது தவறான கருத்தாகும். இந்த விவகாரத்தில் எந்த இடத்திலும் காவல் துறை தொய்வாக இருக்கவில்லை.

எடப்பாடி பழனிசாமி

சிபிஐ விசாரணை வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமி கூறுவது ஏற்றுக் கொள்ள முடியாது. எதற்கெடுத்தாலும் சிபிஐ விசாரணை கோருகிறார் எடப்பாடி பழனிசாமி. எதற்கு சிபிஐ விசாரணை வேண்டும் என்று முறை உள்ளது. தமிழக காவல்துறை மெத்தனமாக இருந்தால் சிபிஐ விசாரணை கேட்பது நியாயம். ஆனால், காவல்துறை சிலமணி நேரத்தில் கைது நடவடிக்கை எடுத்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு உள்ளது. முழு விசாரணையின்போதுதான் நடந்தது என்னவென்று தெரியும். போராட்டத்துக்கு அனுமதி அளிப்பது என்பது இடம், சட்டம்-ஒழுங்கு மற்றும் பாதுகாப்பை பொறுத்து காவல்துறை அனுமதி அளிக்கிறது. மாணவி பாலியல் துன்புறுத்தல் விவகாரத்தில் கைது செய்யப்பட்டவருக்கும், தி.மு.க-வுக்கும் எந்த தொடர்பும் இல்லை. கட்சியின் உறுப்பினராவதற்கும், பொறுப்பில் இருப்பதற்கும் வேறுபாடு இருக்கிறது.

அமைச்சர் முத்துசாமி

அப்படியென்றால், அதிமுக நிர்வாகிகளும் கைது செய்யப்பட்டவரின் வீட்டுக்குச் சென்று உணவருந்தி உள்ளனர். திமுக நிர்வாகிகளை போகிறபோக்கில் கைதானவர் அழைத்திருக்கலாம். அதற்காக அவர் வீட்டுக்குச் சென்றிருக்கலாம். புகைப்படம் இருப்பதாலேயே கைது செய்யப்பட்டவர் திமுக நிர்வாகி என்று சொல்ல முடியாது. இந்த கருத்தைத்தான் நீதிமன்றமும் தெரிவித்துள்ளது. நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்த பின்னர்தான் உண்மை நிலைகள் தெரியும். இந்த விவகாரத்தை தமிழக அரசு எள்ளளவும் விட்டுக்கொடுக்காது" என்றார்.

Seeman: ``சீமான் கண்ணியத்தைக் காக்கத் தவறிவிட்டார்... நடந்தது இதுதான்'' - பபாசி நிர்வாகிகள் காட்டம்

நூல் வெளியீட்டு விழாவில் சீமான்சென்னை நந்தனம் ஒய் எம் சி ஏ மைதானத்தில் 48-வது புத்தகக் கண்காட்சி கடந்த ஒரு வாரமாக நடந்து வருகிறது.இதில் கடந்த ஜனவரி 4-ம் தேதி 'தமிழ்த்தேசியம் ஏன்? எதற்கு? எப்படி?' என்ற... மேலும் பார்க்க

திருப்பத்தூர்: நெடுஞ்சாலையில் தொடரும் விபத்து; சுட்டிக்காட்டிய விகடன்- நடவடிக்கை எடுத்த அதிகாரிகள்!

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த ரெட்டியூர் அருகே, நான்குவழிச் சாலை அமைத்துக் கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகிறது. இந்த நெடுஞ்சாலையை (179A) ஆம்பூர், வேலூர், சென்னை செல்ல வாகன ஓட்டி... மேலும் பார்க்க

OYO: திருமணமாகாத ஜோடிகளுக்கு இனி அனுமதி இல்லை; 'ஓயோ'-வின் திடீர் நடவடிக்கைக்குக் காரணம் இதுதான்!

இந்தியா முழுவதும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஆன்லைன் மூலம் பல தங்கும் விடுதிகளை நடத்தி வருகிறது பிரபல 'OYO' நிறுவனம்.திருமணமாகாதவர்கள், நண்பர்கள், காதலர்கள் என எல்லோருக்கும் அனுமதி வழங்கி வந்தது 'OYO'... மேலும் பார்க்க

GST: ரூ.40 லட்சம் வருமானம்... பானிபூரி விற்பவருக்கு வந்த ஜி.எஸ்.டி நோட்டீஸ்! - என்ன நடந்தது?

தமிழ்நாட்டைச் சேர்ந்த பானிபூரி விற்பனையாளர் ஒருவருக்கு ஜி.எஸ்.டி (GST) நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 2023-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு வரை பானிபூரி விற்றதின் மூலம் அந்தப் பானிபூரி விற்பனையாளரின் ஆண்டு ... மேலும் பார்க்க

M K Stalin: `சிந்துவெளி எழுத்து முறை; ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு' - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் சிந்துவெளிப் பண்பாட்டுக் கண்டுபிடிப்பு நூற்றாண்டு நிறைவு பன்னாட்டு கருத்தரங்கை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதையடுத்துப் பேசிய ஸ்டாலின், "சிந்துவெளி நா... மேலும் பார்க்க