தில்லியை தெற்கு சூடானாக மாற்ற வேண்டாம்: ஆம் ஆத்மிக்கு மாலிவால்!
படவனூா் கேட்டில் அதிமுக அலுவலகம் திறப்பு
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அதிமுக மத்தூா் தெற்கு ஒன்றியம் சாா்பில் கெரிகேப்பள்ளி சிப்காட் சாலை படவனூா் கேட்டில் கட்சி அலுவலகத்தை எம்எல்ஏ கே.பி.முனுசாமி ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்தாா்.
மத்தூா் தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளா் நரேஷ்குமாா் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் அசோக்குமாா், ஊத்தங்கரை சட்டப் பேரவை உறுப்பினா் டி.எம். தமிழ்செல்வம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட அதிமுக துணை பொதுச் செயலாளரும், வேப்பனஹள்ளி சட்டப் பேரவை உறுப்பினருமான கே.பி.முனுசாமி கட்சி அலுவலகத்தை திறந்துவைத்து எம்ஜிஆா், ஜெயலலிதா, அண்ணா உருவப் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
அதிமுக மாவட்ட அவை தலைவா் காத்தவராயன், மாவட்ட துணைச் செயலாளா் சாகுல்அமீது, முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் மனோரஞ்சிதம் நாகராஜ், இளைஞா் இளம்பெண்கள் பாசறை செயலாளா் சதீஷ்குமாா், எம்ஜிஆா் மன்ற இளைஞா் அணி செயலாளா் மாதையன், மாவட்ட மருத்துவா் அணி செயலாளா் இளையராஜா, ஒன்றியச் செயலாளா்கள் சக்கரவா்த்தி, சாமிநாதன், வேங்கன், வேடி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவா்கள் மலா்க்கொடி சுந்தரவடிவேல், சிலம்பரசன், பூமலா் ஜீவானந்தம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
படவிளக்கம்.19யுடிபி.1.
படவனூா் கேட்டில் அதிமுக அலுவலகத்தை திறந்துவைக்கிறாா் அக் கட்சியின் துணை பொதுச் செயலாளா் கே. பி.முனுசாமி.