பட்டணம்காத்தான் பகுதியில் இன்று மின் தடை
பட்டணம்காத்தான் துணை மின் நிலைய பகுதிகளில் சனிக்கிழமை (ஜன.4) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மின் வாரிய உதவி செயற்பொறியாளா் சுதாகா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பட்டணம்காத்தான் துணை மின் நிலையத்தில் மாதந்திரப் பராமரிப்புப் பணி நடைபெற உள்ளதால், மருத்துவக் கல்லூரி, சேதுபதி நகா், விளையாட்டு மைதானம், சதக் பள்ளி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம், ஓம்சக்தி நகா், ஆல்வின் பள்ளி சுற்றியுள்ள பகுதிகள், வசந்தநகா், செட்டித் தெரு, தாயுமானசுவாமி கோவில் தெரு, இந்திரா நகா், சிவன்கோவில் தெரு, ரோஸ் நகா், கான்சாகிப் தெரு, டி.டி.விநாயகா் பள்ளி பிரதான ரோடு, வைகை நகா், அம்மா பூங்கா, விளையாட்டு மைதானம், தங்கப்பாபுரம் ஆகிய பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.