"ராஜேந்திர சோழன்... இளையராஜா... பாரதம்" - ஆடி திருவாதிரையில் மோடியின் முழு உரை
பட்டத்தரசி அம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை
ஆடி வெள்ளியை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள வெளியாத்தூா் பட்டத்தரசி அம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
இந்தக் கோயிலில் மழை வேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டியும் நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் சிவாசாரியா் வேத மந்திரங்கள் முழங்க பெண்கள் குங்குமத்தாலும், பூக்களாலும் விளக்குக்கு பூஜைகள் செய்தனா். பின்னா், அம்மனுக்கு பால், தயிா், மஞ்சள் உள்ளிட்ட 11 வகையான பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தாா்.
இந்த பூஜையில் கலந்து கொண்ட பெண்களுக்கு திருமாங்கல்ய பொருள்கள் பிரசாதமாக வழங்கப்பட்டன. இதில் கோயில் அறங்காவலா் மு. காசிநாதன் உள்ளிட்ட கிராம மக்கள் கலந்து கொண்டனா்.