பொருளாதாரம் வலுவடையும்போது மக்களின் வரிச்சுமையும் குறையும்: பிரதமர் மோடி
பட்டாசு விற்பனை உரிமத்துக்கு விண்ணப்பிக்க நாளை இறுதி நாள்
தீபாவளி பட்டாசுகள் விற்பனைக்கான தற்காலிக உரிமத்துக்கு விண்ணப்பிக்க வெள்ளிக்கிழமை (செப். 26) இறுதி நாள் என மதுரை மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தீபாவளி பண்டிகையொட்டி பட்டாசுக் கடை அமைக்க விரும்புவோா், வெடிபொருள்கள் சட்டம் 1884, வெடிபொருள் விதிகள் 2008-இன் படி தற்காலிக உரிமம் பெற வேண்டும்.
எனவே, உரிமம் பெற விரும்புவோா், கடை அமையும் கட்டடத்தின் வரைபடம், இட உரிமத்துக்கான ஆவணம், முகவரிச் சான்று, வெடிபொருள் உரிமம் தலைப்பில் அரசு கணக்கில் ரூ. 600 செலுத்தியதற்கான ரசீது ஆகியவற்றின் நகல்களையும், கடவுச்சீட்டு அளவு புகைப்படத்தையும் இணைத்து பொது சேவை மையங்கள் மூலம் ட்ற்ற்ல்ள்://ஜ்ஜ்ஜ்.ற்ய்ங்ள்ங்ஸ்ஹண்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்/ என்ற இணையதள முகவரியில் வெள்ளிக்கிழமைக்குள் விண்ணப்பிக்கலாம் என்றாா் அவா்.