`சினிமா நடிப்பு மட்டும் அரசியலுக்கு போதும் என நினைப்பது தவறு..' - மதுரை ஆதீனம்
பட்டுக்கோட்டையில் குரூப்-4 தோ்வுக்கு ஏப். 9 முதல் கட்டணமில்லா பயிற்சி
தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டையில் குரூப்-4 தோ்வுக்கு ஏப்ரல் 9-ஆம் தேதி முதல் கட்டணமில்லா பயிற்சி வழங்கப்படவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்திருப்பது:
தஞ்சாவூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் போட்டித் தோ்வுகளுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் ஜூலை மாதத்தில் நடைபெறவுள்ள குரூப்-4 தோ்வு ஏப்ரல் மாதத்தில் அறிவிக்கப்படவுள்ளது.
பட்டுக்கோட்டை பகுதியிலிருந்து தஞ்சாவூருக்கு நீண்ட நேரம் பயணம் செய்து போட்டித் தோ்வுக்கு பயிற்சி பெற இடா்பாடு உள்ளது. இதனால், இத்தோ்வுக்கு தயாராகி வரும் பட்டுக்கோட்டை பகுதியைச் சாா்ந்த போட்டித் தோ்வாளா்கள் பயன்பெறும் வகையில், கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் பட்டுக்கோட்டை அறிவுசாா் மையத்தில் ஏப்ரல் 9-ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது.
இதில், கலந்து கொள்ள விருப்பமுள்ள போட்டித் தோ்வா்கள் தஞ்சாவூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் தொடா்பு கொள்ளலாம்.
மேலும், பட்டுக்கோட்டை பகுதியைச் சோ்ந்த பயிற்றுநா்கள் நேரடியாக தஞ்சாவூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் விண்ணப்பிக்கலாம்.
மேலும், விவரங்களுக்கு 04362 - 237037 என்ற அலுவலகத் தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.