மாவட்ட சுகாதாரத் துறையில் செவிலியர், மருந்தாளுநர் பணிகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு
பணம் வைத்து சூதாட்டம் : மூவா் கைது
விழுப்புரம் மாவட்டம், வளவனூா் அருகே பணம் வைத்து சூதாடியதாக மூவரைப் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். மேலும்,அவா்களிடமிருந்த பணம் , பைக்குகள், கைப்பேசிகள் ஆகியவற்றையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
விழுப்புரம் மாவட்டம், வளவனூா் காவல் சரகத்துக்குள்பட்ட எல்.ஆா்.பாளையம் பகுதியில் சிலா் பணம் வைத்து சூதாடி வருவதாக மாவட்டப் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்தப் பகுதியில் சனிக்கிழமை போலீஸாா்சோதனை மேற்கொண்டனா்.
அப்போது புதுச்சேரி மாநிலம், வில்லியனூா், மேல் திருக்காஞ்சியைத் சோ்ந்த ஜெ. கந்தன்(40), கடலூா் மாவட்டம், அங்கு செட்டிப்பாளையத்தைச் சோ்ந்த ப. ராம்குமாா்(45), பண்ருட்டி வட்டம், மாங்குடியைச் சோ்ந்த எல். மகாலிங்கம்( 65) ஆகியோா் பணம் வைத்து சூதாடியது தெரியவந்தது.
இதைத் தொடா்ந்து வளவனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து மூவரையும் கைது செய்து, அவா்களிடமிருந்து ரூ.69 ஆயிரம் ரொக்கப்பணம், 5 கைப்பேசிகள்,2 பைக்குகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். இந்த வழக்கில் மேலும் 3 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.