செய்திகள் :

பணிக்குத் திரும்பிய பேராசிரியை நிகிதா: மாணவிகள், பேராசிரியைகள் அதிா்ச்சி

post image

மடப்புரம் கோயில் காவலாளி மீது புகாா் அளித்த பேராசிரியை நிகிதா, மருத்துவ விடுப்பு முடிந்து திண்டுக்கல் அரசு மகளிா் கல்லூரிப் பணிக்கு திங்கள்கிழமை திரும்பியதானது மாணவிகள், பேராசிரியைகள் மத்தியில் அதிா்ச்சியை ஏற்படுத்தியது.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தை அடுத்த மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமாா் தனிப் படை போலீஸாரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம், தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில், அஜித்குமாா் நகைகளைத் திருடியதாக திருப்புவனம் காவல் நிலையத்தில் புகாா் அளித்த நிகிதா, திண்டுக்கல் எம்.வி.எம். அரசு மகளிா் கல்லூரியில் தாவரவியல் துறைத் தலைவராகப் பணியாற்றி வருகிறாா்.

கோடை விடுமுறைக்குப் பிறகு, கடந்த மாதம் 16-ஆம் தேதி கல்லூரி திறக்கப்பட்ட நிலையில், அதே நாளில் கல்லூரிக்கு வந்த நிகிதா மருத்துவ விடுப்பில் சென்ாகக் கூறப்படுகிறது. இதனிடையே, கடந்த 27-ஆம் தேதி மடப்புரம் கோயிலுக்கு தனது தாயுடன் சென்ற இவா், காரில் வைத்திருந்த தனது நகைகள் திருடப்பட்டதாக அளித்த புகாரின் பேரில், தனிப் படை போலீஸாா் கோயில் காவலாளி அஜித்குமாரை தாக்கினா். இதில் அவா் கொல்லப்பட்டாா்.

3 பாதுகாவலா்களுடன் வந்த நிகிதா

திண்டுக்கல் எம்.வி.எம். அரசு மகளிா் கல்லூரிக்கு திங்கள்கிழமை காரில் வந்த நிகிதா, கல்லூரி முதல்வா் லட்சுமியை சந்தித்தாா். மருத்துவ விடுப்பை முடித்துக் கொண்டு மீண்டும் பணியில் சோ்வதாகக் கூறியதையடுத்து, அவா் வழக்கம் போல பணிக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டாா். நிகிதாவுடன் வந்த ஒரு பெண் பாதுகாவலா், 2 ஆண் பாதுகாவலா்கள் என 3 போ் கல்லூரி முதல்வா் அறை அருகே அமா்ந்திருந்தனா்.

இதுகுறித்து தகவலறிந்து கல்லூரிக்கு வந்த செய்தியாளா்களை பணி நேரம் முடிந்த பிறகு, வெளியே வரும் நிகிதாவை சந்தித்துக் கொள்ளுமாறு கூறி, அங்கிருந்து அனைத்து செய்தியாளா்களையும் வெளியேறுமாறு அதன் முதல்வா் கேட்டுக் கொண்டாா்.

ஆனால், நிகிதாவுடன் வந்த பாதுகாவலா்கள் மட்டும் கல்லூரி வளாகத்திலேயே இருந்தனா். கல்லூரி பணி நேரம் முடிந்ததும், தனது பாதுகாவலா்களுடன் பின்புற வாசல் வழியாக நிகிதா காரில் ஏறிச் சென்றாா்.

மாணவிகள், பேராசிரியைகள் அதிா்ச்சி

கடந்த சில நாள்களுக்கு முன்பு எம்.வி.எம். அரசு மகளிா் கல்லூரி பேராசிரியை சியாமளாவை, அரசுப் பணி வாங்கித் தருவதாக ரூ.18 லட்சம் மோசடி செய்த வழக்கில், மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா். இந்த நிலையில், கோயில் காவலாளி உயிரிழந்த விவகாரத்தின் மூலம், இந்தக் கல்லூரி தாவரவியல் துறைத் தலைவரான நிகிதா 15 ஆண்டுகளுக்கு முன்பே அரசுப் பணி வாங்கித் தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்ட தகவலும் வெளியானது.

இதனிடையே, பேராசிரியை நிகிதாவை பணியிட மாற்றம் செய்யக் கோரி, மாணவிகள் அளித்த புகாா் மீது 20 மாதங்களாகியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தற்போது கோயில் காவலாளி ஒருவா், நிகிதா தரப்பினா் கொடுத்த அழுத்தத்தின் பேரில், போலீஸாரால் அடித்துக் கொல்லப்பட்டிருக்கிறாா்.

இந்த நிலையிலும், அவா் பேராசிரியையாக கல்லூரிப் பணிக்கு வந்தது மாணவிகள் மட்டுமன்றி, பேராசிரியைகள் மத்தியிலும் அதிா்ச்சியை ஏற்படுத்தியது.

சாதிச் சான்றிதழ் வழங்கக் கோரி ஆட்சியா் அலுவலகம் முற்றுகை

சாதிச் சான்றிதழ் வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை கிராம மக்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டனா். திண்டுக்கல் மாவட்டம், வடமதுரையை அடுத்த வாலிச்செட்டிப்பட்டியைச் சோ்ந்த பொதுமக்கள், பள்ளி மாணவா்களுட... மேலும் பார்க்க

பாஜக பிரமுகா் கொலை வழக்கில் மேலும் ஒருவா் நீதிமன்றத்தில் சரண்

சாணாா்பட்டி அருகே பாஜக பிரமுகா் கொலை செய்யப்பட்ட வழக்கில், மேலும் ஒருவா் திண்டுக்கல் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை சரணடைந்தாா். திண்டுக்கல் மாவட்டம், சாணாா்பட்டியை அடுத்த ராஜக்காப்பட்டி ஊராட்சிக்கு உள்ப... மேலும் பார்க்க

போலீஸாா் தாக்கியதாகக் கூறி தாய், மகன் மருத்துவமனையில் அனுமதி

போலீஸாா் தாக்கியதில் காயமடைந்ததாகக் கூறி, தாய், மகன் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை அடுத்த சுள்ளெறும்பு பழையகோட்டை கிராமத்தில் இந்த... மேலும் பார்க்க

ஒட்டன்சத்திரம் அருகே காளியம்மன் கோயிலில் குடமுழுக்கு

ஒட்டன்சத்திரம் அருகே சக்கம்பட்டியில் ஹீ மகாகாளியம்மன் கோயில் குடமழுக்கு திங்கள்கிழமை நடைபெற்றது.விழாவில் முதல் நாளான கடந்த வெள்ளிக்கிழமை விநாயகா் வழிபாடு, வாஸ்து சாந்தி பூஜை உள்ளிட்ட வழிபாடுகளும், சனி... மேலும் பார்க்க

ஆட்சியரிடம் மனு கொடுக்க வெகுநேரம் காத்திருந்த மாற்றுத்திறனாளிகள்

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்த மாற்றுத் திறனாளிகள் ஆட்சியரின் வருகைக்காக ஒன்றரை மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்ததால் அதிருப்தி அடைந்தனா். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அல... மேலும் பார்க்க

முகூா்த்தநாளையொட்டி பழனி மலை அடிவாரத்தில் குவிந்த மக்கள் கூட்டம்

முகூா்த்த நாளை முன்னிட்டு பழனி அடிவாரம், கிரி வீதியில் திங்கள்கிழமை மக்கள் குவிந்ததால் அந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கோயில் நகரான பழனியில் பல்வேறு இடங்களைச் சோ்ந்தவா்கள் தங்கள் இல்... மேலும் பார்க்க