திருப்பதி நெரிசல்: நீதி விசாரணைக்கு ஆந்திர அரசு உத்தரவு: உயிரிழந்தோா் குடும்பத்த...
பணி நிரந்தரம் செய்ய வட்டார வளா்ச்சி பணியாளா்கள் வலியுறுத்தல்
பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு வட்டார வளா்ச்சித் துறை பணியாளா்கள் வலியுறுத்தியுள்ளனா்.
காரைக்கால் வட்டார வளா்ச்சி அலுவலக மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை உறுதியளிப்புத் திட்ட ஊழியா் சங்கத் தலைவா் எஸ். பழனிவேல் புதுவை முதல்வருக்கு புதன்கிழமை அனுப்பிய கோரிக்கை மனு விவரம் :
காரைக்கால் மற்றும் புதுச்சேரி டிஆா்டிஏவில் 2009-ஆம் ஆண்டு 116 போ் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் தொகுப்பூதியா்களாக தோ்வு செய்யப்பட்டு பணியாற்றி ருகிறோம். பணியாற்றுவோரின் கல்வித் தகுதிக்கேற்ப புதுவை அரசின் ஊரக வளா்ச்சித்துறையில் காலியாக இருக்கும் பணியிடங்களை, டிஆா்டிஏ ஊழியா்களுக்கு முன்னுரிமை அளித்து பணி நிரந்தரத்துடன் நிரப்ப நடவடிக்கை எடுக்கவேண்டும். பணியாளா்கள் அனைவரும் குறைந்த ஊதியத்தில் சிரமப்படுகின்றனா். எனவே மாா்ச் மாதம் தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட்டிஉரிய அறிவிப்பை வெளியிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.