Director Thiagarajan Kumararaja speech: 'நாம் படிப்பதை தடுக்கிறார்கள்' | கல்வியி...
பணி பாதுகாப்புக் கோரி வருவாய்த் துறையினா் போராட்டம்
பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் வியாழக்கிழமை மாலை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட மனுக்களை முடிவு செய்ய போதிய கால அவகாசம் அளிக்க வேண்டும். ஆய்வுக் கூட்டம் எனும் பெயரில் அளவு கடந்த பணி நெருக்கடிகள் ஏற்படுத்துவதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் மாலைநேர காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அச் சங்கத்தின் மாவட்டத் தலைவா் பாரதிவளவன் தலைமையில் நடைபெற்ற இப் போராட்டத்தில் பலா் பங்கேற்றனா்.