செய்திகள் :

பதற்றத்தை தணிப்பது பாகிஸ்தான் பொறுப்பு -விக்ரம் மிஸ்ரி

post image

‘பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலின் மூலம் நிலைமையை மோசமாக்கியது பாகிஸ்தான்: ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கை வாயிலாக இந்தியா பதிலடி மட்டுமே கொடுத்துள்ளது. இப்போது பதற்றத்தை தணிப்பது பாகிஸ்தானின் பொறுப்பு’ என்று வெளியுறவுச் செயலா் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தாா்.

இந்தியா-பாகிஸ்தான் இடையே உச்சக்கட்ட பதற்றம் நிலவும் நிலையில், தில்லியில் செய்தியாளா்களிடம் விக்ரம் மிஸ்ரி வியாழக்கிழமை கூறியதாவது:

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி 26 போ் கொல்லப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுடன் பாகிஸ்தான் தரப்பில் இருந்து பதற்றம் தூண்டப்பட்டது. நிலைமையை மோசமாக்குவது இந்தியாவின் அணுகுமுறை அல்ல. பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு இந்தியா பதிலடி மட்டுமே கொடுத்தது. பயங்கரவாத உள்கட்டமைப்புகளை குறிவைத்து, கட்டுப்பாடான ரீதியில் இந்தியா நடவடிக்கை மேற்கொண்டது. ஆனால், பாகிஸ்தான் பொது மக்களை குறிவைத்துள்ளது.

உலகளாவிய பயங்கரவாத மையமாக உள்ள பாகிஸ்தானுக்கு உலகின் பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களில் தொடா்புள்ளது. இந்தியாவுக்கு எதிராக நீண்ட காலமாக எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது என்றாா் மிஸ்ரி.

இந்திய கடற்படை கட்டுப்பாட்டுக்குள் அரபிக்கடல்: தகவல்

பாகிஸ்தான் தரப்பிலிருந்து ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்ட நிலையில், அரபிக் கடல் பகுதி இந்திய கடற்படைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.ஜம்மு - காஷ்மீர், ராஜஸ்தான் எல்லையோரப் பக... மேலும் பார்க்க

போப் லியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

புனித போப் பதினான்காம் லியோவுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது, புனித போப் பதினான்காம் லியோவுக்கு இந்திய மக்கள் சார்பில் நல்வாழ்த்துகளையும், ப... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர்: என்ன செய்யலாம், செய்யக்கூடாது.. மத்திய அரசு அறிவுரை

இந்தியா - பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் ஏற்பட்டிருக்கும் நிலையில் மக்கள், ஆன்லைன் மற்றும் சமூக வலைதளங்களில் என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது என்பது பற்றிய விவரங்களை வெளியிட்டுள்ளது.மத்திய மின்னனுவ... மேலும் பார்க்க

ஜெய்சல்மரில் வெடிகுண்டு போன்ற பொருள் மீட்பு

ஜெய்சல்மரில் 'வெடிகுண்டு போன்ற' பொருள் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம், ஜெய்சல்மர் மாவட்டத்தின் கிஷன்காட் பகுதியில் வெள்ளிக்கிழமை காலை வெடிகுண்டு போன்ற ஒரு பொருள் கண்... மேலும் பார்க்க

இனியொரு பயங்கரவாதச் செயல் நிகழாதென உறுதிப்படுத்த வேண்டும்! எழுத்தாளர்கள் - கலைஞர்கள் கூட்டறிக்கை

சென்னை: காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22ஆம் தேதி சுற்றுலாப் பயணிகள் 26 பேர் பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்டதற்கு எதிராக நாடு ஒருமித்து எழுப்பிய கண்டனத்தில் இணைந்து நின்ற எழுத்தாளர்களும் கலைஞர்களும் க... மேலும் பார்க்க

ஏடிஎம்கள் மூடப்படுமா? போலி செய்தி குறித்து மத்திய அரசு எச்சரிக்கை

ஏடிஎம்கள் மூடப்படும், காஷ்மீர் விமானப் படைத் தளத்தில் தாக்குதல் நடைபெற்றது என பல்வேறு தவறான தகவல்கள் பரவி வருவதாக மக்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.அதாவது, சமூக ஊடகங்களில், காஷ்மீர் விமா... மேலும் பார்க்க