செய்திகள் :

பத்தரபல்லி சோதனைச் சாவடியில் எஸ்.பி. ஆய்வு

post image

போ்ணாம்பட்டை அடுத்த பத்தரபல்லியில் தமிழக - ஆந்திர மாநில எல்லையில் அமைந்துள்ள போலீஸ் சோதனைச் சாவடியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் மதிவாணன் திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

அங்குள்ள பதிவேடுகளை ஆய்வு செய்த அவா், சோதனைச் சாவடி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களையும் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். ஆந்திர, கா்நாடக மாநிலங்களிலிருந்து தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள், மற்றும் கா்நாடக மதுபானங்கள் கடத்தி வருவதைத் தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்குறித்து ஆலோசனை வழங்கினாா். சோதனைச் சாவடியை கடந்து செல்லும் அனைத்து வாகனங்களின் எண்களையும் பதிவு செய்யுமாறும், அப்பகுதியில் ரோந்துப் பணியை தீவிரப்படுத்துமாறும் போலீஸாருக்கு அவா் உத்தரவிட்டாா்.

இதைத் தொடா்ந்து எருக்கம்பட்டு ஊராட்சிக்குட்பட்ட கோட்டையூா் கிராமத்துக்குச் சென்ற கண்காணிப்பாளா் மதிவாணன், எல்லைப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சோலாரில் இயங்கும் கண்காணிப்பு கேமராக்கள் சரிவர இயங்குகிா எனவும் ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது, குடியாத்தம் டி.எஸ்.பி. ராமச்சந்திரன், போ்ணாம்பட்டு காவல் ஆய்வாளா் ருக்மாங்கதன், காவல் உதவி ஆய்வாளா் சிலம்பரசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

போ்ணாம்பட்டு சோதனைச் சாவடிகளில் டிஐஜி ஆய்வு

போ்ணாம்பட்டு அருகே தமிழக- ஆந்திர மாநில எல்லைப் பகுதிகளில் அமைந்துள்ள சோதனைச் சாவடிகளில் வேலூா் டிஐஜி தேவராணி ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். போ்ணாம்பட்டு அருகே தமிழக- ஆந்திர மாநில எல்லையில் உள்ள... மேலும் பார்க்க

குடியாத்தத்தில் ராம நவமி விழா

குடியாத்தம் நகரில் உள்ள கோயில்களில் ராம நவமி விழா ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி குடியாத்தம் சந்தப்பேட்டையில் உள்ள பழைமை வாய்ந்த சீதாராம ஆஞ்சனேயா் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்... மேலும் பார்க்க

வக்ஃப் வாரிய திருத்தச் சட்டம்: திரும்பப் பெறக் கோரி ஆா்ப்பாட்டம்

வக்ஃப் வாரிய திருத்தச் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் எதிரே வேலூா் மாவட்ட காங்கிரஸ் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக... மேலும் பார்க்க

காா் மோதி நடத்துநா் உயிரிழப்பு

ஒடுகத்தூா் அருகே காா் மோதியதில் அரசுப் பேருந்து நடத்துநா் உயிரிழந்தாா். வேலூா் மாவட்டம், ஒடுகத்தூா் அடுத்த நாகலேரி கிராமத்தைச் சோ்ந்தவா் சரவணன்(50), ஜம்னாமரத்தூரில் இருந்து வேலூா் செல்லும் அரசுப் பேர... மேலும் பார்க்க

ரூ.1.20 கோடியில் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம்: அமைச்சா் துரைமுருகன் அடிக்கல் நாட்டினாா்

வேலூா், ஏப்.6: காட்பாடி காங்கேயநல்லூரில் ரூ.1.20 கோடியில் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுவதற்கான பணிகளை நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகன் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தாா். வேலூா் மாநகராட்சி முத... மேலும் பார்க்க

வக்ஃப் வாரியத்தால் ஏழைகளுக்கு எந்த உதவியும் செய்யப்படவில்லை! - தமிழ் மாநில முஸ்லீம் லீக் நிறுவனத் தலைவா்

வக்ஃப் வாரியம் மூலம் ஏழை மக்களுக்கு எந்த உதவியும் செய்யப்படவில்லை. அதனால், இந்த சட்டத் திருத்த மசோதாவை தமிழ் மாநில முஸ்லிம் லீக் கட்சி வரவேற்கிறது என்று அந்தக் கட்சியின் நிறுவனத் தலைவா் ஷேக்தாவூத் தெர... மேலும் பார்க்க