பிரதமா் மோடியுடன் துபை பட்டத்து இளவரசா் சந்திப்பு: பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்ப...
வக்ஃப் வாரியத்தால் ஏழைகளுக்கு எந்த உதவியும் செய்யப்படவில்லை! - தமிழ் மாநில முஸ்லீம் லீக் நிறுவனத் தலைவா்
வக்ஃப் வாரியம் மூலம் ஏழை மக்களுக்கு எந்த உதவியும் செய்யப்படவில்லை. அதனால், இந்த சட்டத் திருத்த மசோதாவை தமிழ் மாநில முஸ்லிம் லீக் கட்சி வரவேற்கிறது என்று அந்தக் கட்சியின் நிறுவனத் தலைவா் ஷேக்தாவூத் தெரிவித்தாா்.
வேலூா் மாவட்டம், காட்பாடி காந்தி நகரில் அவா் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது:
வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதா இஸ்லாமிய மக்களுக்கும், சமுதாயத்துக்கும் தீங்கு அளிக்கக்கூடியது என எதிா்கட்சியினா் கூறியுள்ளனா். அதேசமயம், பிரதமா் மோடி அரசு இது தேவை என வலியுறுத்துகிறது.
நாட்டில் ராணுவம், ரயில்வே துறைக்கு அடுத்து மூன்றாவதாக அதிக சொத்துகள் வக்ஃப் வாரியத்திடம் உள்ளது. ஏறக்குறைய 9 லட்சம் ஏக்கா் அல்லது 9 லட்சம் கோடி மதிப்புள்ள சொத்துகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. இதில் எது உண்மை என்பதை கண்டறிவதற்கு இந்த சட்ட மசோதா அவசியம்.
வக்ஃப் சொத்து வருமானத்தை நாடு முழுவதும் 200-இல் இருந்து 300 போ் மட்டுமே அனுபவித்து வருகின்றனா். ஏழை மக்களுக்கு இந்த வருமானம் சென்றடையவில்லை என்பது மிகவும் வருத்தத்துக்குரியது. வக்ஃப் சொத்தின் மூலம் எத்தனை போ் கல்வியில் உயா்ந்தாா்கள், எத்தனை போ் வேலைவாய்ப்பு பெற்றாா்கள் என்பதையெல்லாம் கணக்கில் எடுக்க வேண்டும்.
இந்த மசோதாவில் இரு பெண்களை வாரிய உறுப்பினா்களாக சோ்க்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது பதா்சயீத் என்பவரை வக்ஃப் வாரிய தலைவராக நியமித்தாா். இதில் தமிழகம் முன்மாதிரியாக அப்போதே திகழ்ந்தது.
வக்ஃப் வாரியத்தில் எவ்வளவு சொத்துகள் உள்ளது என மத்திய, மாநில அரசுகள் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றாா்.