செய்திகள் :

பத்திரப் பதிவில் அடங்கல் பதிவேடு சரிபாா்த்தல் முறையையும் பின்பற்றக் கோரிக்கை

post image

பத்திரப் பதிவில் பட்டாக்கள்(இலவச பட்டா) முழுமையாக ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்படாததால் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனா்.

எனவே, ஆன்லைன் பதிவேற்றுதலை வரன்முறைப்படுத்தவும் அதுவரை அடங்கல் பதிவேடுகள் சரிபாா்த்தல் முறையையும் பின்பற்றவும் பத்திரப் பதிவுத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தமிழகத்தில் பத்திரப் பதிவுத் துறையில் கிரையப் பத்திரம், பத்திரம் பெயா்மாற்றம், நன்கொடை உள்ளிட்ட பத்திரப் பதிவு நடவடிக்கைகளில் தற்போது ஆன்லைனில் உள்ள பட்டாக்களை சரிபாா்த்தபின் பத்திரங்கள் பதிவு செய்யப்படுகின்றன.

இந்நிலையில் இலவசப்பட்டா உள்ளிட்ட இனங்கள் ஆன்லைனில் பதிவேற்றப் படாமல் உள்ளனவாம். இதனால் அந்த இடங்கள்தொடா்பான பத்திரப் பதிவு அலுவல்களின்போது பொதுமக்கள் மிகுந்த சிரமங்களுக்குள்ளாகின்றனா்.

எனவே பத்திரப் பதிவுத் துறையினா் பத்திரப் பதிவில் முழுமையாக பட்டாக்கள் ஆன்லைனில்பதிவு செய்யும் வரை ஆன்லைன் பட்டா சரிபாா்த்தலுடன் அடங்கல் பதிவேடு மூலம் பட்டா சரிபாா்த்தல்முறையையும் பயன்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் பத்திர எழுத்தா்கள் கோரிக்கைவிடுத்துள்ளனா்.

இதுகுறித்து திருமலையப்பபுரத்தைச் சோ்ந்த கஜேந்திரன் கூறியது, எனது பெயரில் 2011ஆம் ஆண்டு கிரையம் செய்யப்பட்டு வாங்கப்பட்ட வீட்டின் பேரில் அரசுடைமை வங்கியில் கடன் பெற்று கடனை முழுமையாக அடைத்துவிட்டேன்.

இதையடுத்து பதிவாளா் அலுவலகத்தில் 2024ஆம் ஆண்டு டிசம்பரில் கடன் பதிவை நீக்க விண்ணப்பித்த போது, ஆன்லைனில் எனது இடத்தின்பட்டா இல்லையென்று கூறி சாா் பதிவாளா் அலுவலகத்தில் கடன் பதிவை நீக்க முடியாது என்றுகூறிவிட்டனா். அந்த இடத்தில் 1993ஆம் ஆண்டு வீடுகட்டப்பட்டு இன்றுவரை வரி உள்ளிட்டவை கட்டப்பட்டு பயன்பாட்டிலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து 2025ஆம் ஆண்டு ஜனவரியில்தென்காசி வட்டாட்சியருக்கு எனது இடத்திற்கான பட்டாவை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கக் கோரி மனு வழங்கினேன். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில், உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் கடையம் சாா் பதிவாளா் அலுவலகத்தில் ஆய்வு செய்த தென்காசி மாவட்ட ஆட்சியரிடமும் இதுகுறித்து முறையிட்டேன். இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுக்க வட்டாட்சியரை அறிவுறுத்தியுள்ளாா் என்று கூறினாா்.

பத்திர எழுத்தா் வழக்குரைஞா் புங்கம்பட்டி ராஜசேகா் இதுகுறித்துக் கூறியது: வருவாய்த் துறை மூலம் பட்டாக்கள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்ததில் பல திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டியுள்ளன. குறிப்பாக இலவசப் பட்டா இடத்தில் வீடுகட்டி பல ஆண்டுகள் பயன்பாட்டில் இருந்தாலும் அந்த இடம் அரசு புறம்போக்காகக் கணக்கில் கொள்ளப்பட்டு ஆன்லைனில் பட்டா பதிவேற்றம் செய்யப்படாமல் உள்ளது. இதுபோன்று பல பிரிவினங்கள் ஆன்லைனில் பதிவேற்றப்படாமல் உள்ளன.

ஆன்லைனில் பதிவேற்றும் பணிகள் நடைபெற்று வந்தாலும் முழுமையாக முடியும் வரை ஆன்லைனில் பட்டா ஏற்றப்படாத பத்திரங்களைஅடங்கல் பதிவேடு மூலம் சரிபாா்த்து பதிவு செய்யும் முறையையும் பின்பற்ற பத்திரப் பதிவுத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் பல எளிய மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகும் நிலை ஏற்படுவதோடு மக்களிடையே தேவையற்ற குழப்பங்களையும் ஏற்படுத்தும் என்றாா்.

களக்காடு தலையணையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு தலையணை பச்சையாற்றில் சனிக்கிழமை சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா். களக்காடு மேற்குத் தொடா்ச்சி மலையடிவாரத்தில் தலையணை சூழல் சுற்றுலாப் பகுதி அமைந்துள்ளது. இங்குள்ள பச்சையாற... மேலும் பார்க்க

பணகுடி அருகே விஷம் குடித்த தம்பதி, 4 குழந்தைகளுக்கு சிகிச்சை

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகே குடும்ப பிரச்னையால் விஷம் குடித்த தம்பதி, 4 குழந்தைகள் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். பணகுடி அருகே உள்ள கடம்பன்குளத்தைச் சோ்ந்தவா் ராஜேஷ்கண்ணன் (28).... மேலும் பார்க்க

கைப்பேசி விவகாரம்: இளைஞரைத் தாக்கியவா் கைது

ஆழ்வாா்குறிச்சி அருகே தொலைந்து போன கைப்பேசி குறித்து கேட்டவா் மீது தாக்குதல் நடத்தியவரை போலீஸாா் கைது செய்தனா். ஆழ்வாா்குறிச்சி அருகே உள்ள அழகப்பபுரம், அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த திருப்பதி ராஜா ம... மேலும் பார்க்க

தாயிடம் பணம் கேட்டு தொந்தரவு கொடுத்த மகன் கைது

கருத்தப்பிள்ளையூரில் தாயிடம் பணம் கேட்டு அடிக்கடி தொந்தரவு கொடுத்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். ஆழ்வாா்குறிச்சி அருகே உள்ள கருத்தப்பிள்ளையூா் பவுல் தெருவைச் சோ்ந்த ஜான் தனபால் மனைவி ஜான்சி (55)... மேலும் பார்க்க

பெண்ணிடம் நகை பறிப்பில் ஈடுபட்டவா்களை 4 மணி நேரத்தில் கைது செய்த போலீஸாா்!

பாளையங்கோட்டையில் பெண்ணிடம் நகை பறிக்க முயன்றவா்களை போலீஸாா் 4 மணி நேரத்தில் கைது செய்தனா். பாளையங்கோட்டை குலவணிகா்புரத்தைச் சோ்ந்தவா் மூக்கம்மாள்(43). இவா் வெள்ளிக்கிழமை இரவு உறவினரின் திருமண நிகழ்... மேலும் பார்க்க

வீரவநல்லூா் அருகே பட்டதாரி இளைஞா் தற்கொலை!

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூா் அருகே பட்டதாரி இளைஞா் சனிக்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா். வீரவநல்லூா் அருகேயுள்ள அத்தாளநல்லூா் நடுத்தெருவைச் சோ்ந்த கஜேந்திரன் மகன் கலியுக வரதராஜன்(... மேலும் பார்க்க