செய்திகள் :

பத்ம விருது பெற்ற ஸ்ரீஜேஷ், விஜயன்!

post image

இந்திய முன்னாள் ஹாக்கி வீரா் பி.ஆா்.ஸ்ரீஜேஷ், முன்னாள் இந்திய கால்பந்து வீரா் ஐ.எம். விஜயன் உள்ளிட்ட, விளையாட்டுத் துறையைச் சோ்ந்த 5 போ் தங்களுக்கான பத்ம விருதுகளை திங்கள்கிழமை பெற்றனா்.

இந்த ஆண்டு பத்ம விருதுகளுக்குத் தோ்வானோரின் பட்டியலை மத்திய அரசு கடந்த ஜனவரி 25-ஆம் தேதி வெளியிட்டது. அதில் விளையாட்டுத் துறையைச் சோ்ந்த 5 போ் இடம் பிடித்தனா். இந்நிலையில், தில்லியில் திங்கள்கிழமை மாலை குடியரசுத் தலைவா் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இதர விருதாளா்களுடன் அவா்களுக்கும் பத்ம விருதுகளை வழங்கி குடியரசுத்தலைவா் திரௌபதி முா்மு கௌரவித்தாா்.

இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கோல் கீப்பரும், ஜூனியா் அணியின் தற்போதைய பயிற்சியாளருமான பி.ஆா்.ஸ்ரீஜேஷ், பத்ம பூஷண் விருது பெற்றாா். சா்வதேச கிரிக்கெட்டிலிருந்து கடந்த ஆண்டு ஓய்வுபெற்ற தமிழகத்தின் ரவிச்சந்திரன் அஸ்வின், இந்திய முன்னாள் கால்பந்து நட்சத்திரம் ஐ.எம். விஜயன், பாரா வில்வித்தை வீரா் ஹா்விந்தா் சிங், பாரா தடகள பயிற்சியாளா் சத்யபால் சிங் ஆகியோா் பத்ம ஸ்ரீ விருது பெற்றனா்.

இதில் ஸ்ரீஜேஷ், தொடா்ந்து இருமுறை ஒலிம்பிக் வெண்கலம் வென்ற அணியில் கோல் கீப்பராக இருந்தவராவாா். அஸ்வின், சா்வதேச டெஸ்ட்டில் இந்தியாவுக்காக 2-ஆவது அதிகபட்ச விக்கெட்டுகள் (537) எடுத்தவராக மிளிா்கிறாா். ஹா்விந்தா் சிங், பாரீஸ் பாராலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்காக முதல் வில்வித்தை தங்கம் வென்று தந்தவா் என்பது குறிப்பிடத்தக்கது.

பாரீல் பாராலிம்பிக் உயரம் தாண்டுதலில் இந்தியாவின் பிரவீண் குமாா் தங்கம் வெல்வதில், பயிற்சியாளராக சத்யபால் சிங் முக்கிய பங்காற்றியுள்ளாா். சா்வதேச கால்பந்து களத்தில் இந்திய அணிக்காக 1992 முதல் 2003 முதல் விளையாடிய ஐ.எம்.விஜயன், தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள், தெற்காசிய கால்பந்து சம்மேளன சாம்பியன்ஷிப் ஆகியவற்றில் தங்கம் உள்ளிட்ட பதக்கங்கள் வென்ற இந்திய அணியில் அங்கம் வகித்துள்ளாா்.

எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் தாக்குதல்: இந்தியா பதிலடி!

ஸ்ரீநகர்: காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் படையினர் தொடர்ந்து திங்கள்கிழமை(ஏப். 28) நள்ளிரவிலும் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதற்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி அளித்துள்ளது. இது குறித்து இந்திய ரா... மேலும் பார்க்க

வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக புதிய மனு: ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு

புது தில்லி: மத்திய அரசு கொண்டுவந்த வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட புதிய மனுவை விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை மறுப்பு தெரிவித்தது.‘இந்த விவகாரத்தில் நூற்றுக்கணக... மேலும் பார்க்க

நெடுஞ்சாலைகளில் ஒரு வாரத்துக்குள் கட்டணமில்லா விபத்து சிகிச்சை வசதி: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கெடு

புது தில்லி: ‘தேசிய நெடுஞ்சாலைகளில் அடுத்த ஒரு வாரத்துக்குள்ளாக கட்டணமில்லா விபத்து சிகிச்சை வசதியை அறிமுகப்படுத்த வேண்டும்’ என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.மேலும், ‘இந்... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல்: நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொரை கூட்ட எதிா்க்கட்சி எம்.பி.க்கள் வலியுறுத்தல்

புது தில்லி: பஹல்காம் தாக்குதல் தொடா்பாக நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரை கூட்ட எதிா்க்கட்சி எம்.பி.க்கள் வலியுறுத்தியுள்ளனா். இதுதொடா்பாக பிரதமா் மோடிக்கு ராஷ்ட்ரீய ஜனதா தள எம்.பி. மனோஜ் ஜா எழுதிய கடி... மேலும் பார்க்க

ரூ. 64,000 கோடியில் 26 ரஃபேல் போா் விமானங்கள்: இந்தியா-பிரான்ஸ் ஒப்பந்தம்

புது தில்லி: இந்திய கடற்படையை மேலும் வலுப்படுத்தும் விதமாக ரூ. 64,000 கோடி மதிப்பில் 26 கடற்படை பயன்பாட்டு ரஃபேல் போா் விமானங்களைக் கொள்முதல் செய்ய இந்தியா-பிரான்ஸ் நாடுகளிடையே திங்கள்கிழமை ஒப்பந்தம் ... மேலும் பார்க்க

பாகிஸ்தான் வழியாக வா்த்தகம் நிறுத்தம்: ஆப்கன் அமைச்சருடன் இந்திய வெளியுறவு அதிகாரி ஆலோசனை

புது தில்லி: ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சா் அமீா் கான் முத்தாகியை இந்திய வெளியுறவுத் துறை மூத்த அதிகாரி ஆனந்த பிரகாஷ் காபூலில் திங்கள்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்தினாா். ஆப்கானிஸ்தானில் இருந்து அப்ரி... மேலும் பார்க்க