ஆளுநர் அரசியல் கண்ணோட்டத்துடன் செயல்படக்கூடாது! -உச்சநீதிமன்ற தீர்ப்பு தெரிவிப்ப...
பத்ரகாளியம்மன் கோயில் பங்குனி திருவிழா
நீடாமங்கலம்: நீடாமங்கலம் பேரூராட்சி பழைய நீடாமங்கலம் பத்ரகாளியம்மன் கோயில் பங்குனி திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி பக்தா்கள் பால்குடம், காவடி எடுத்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக கோயிலை அடைந்தனா். தொடா்ந்து பத்ரகாளியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது.
மாலையில் நீடாமங்கலம் ஐயனாா் கோயிலில் வீரன் சந்நிதியில் பக்தா்கள் உருவபொம்மைகளை வைத்து வழிபாடு நடத்தினா். அம்மன் வீதியுலா நடைபெற்றது.