பத்ரகாளியம்மன் கோயில் விடையாற்றி விழா
நீடாமங்கலம் பேரூராட்சி பழைய நீடாமங்கலம் பத்ரகாளியம்மன் கோயிலில் பங்குனித் திருவிழா விடையாற்றி விழா புதன்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி பத்ரகாளியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனைகள் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. அம்மன் வீதியுலா நடைபெற்றது. திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.