பனியன் நிறுவனத்துக்கு ரூ.1 லட்சம் அபராதம்
திருப்பூரில் பனியன் நிறுவனத்திற்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து மாநகராட்சி நிா்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடா்பாக திருப்பூா் மாநகராட்சி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருப்பூா் மாநகராட்சி, 2-ஆவது மண்டலம் 8-ஆவது வாா்டுக்கு உள்பட்ட கங்கா நகரில் உள்ள தனியாா் பனியன் நிறுவனத்தில் இருந்து பிரதான சாலையில் உள்ள பாதாளச் சாக்கடை குழாயில் தொழிற்சாலை கழிவுநீரை மாநகராட்சி முன்அனுமதியின்றி விதிகளுக்கு முரணாக இணைத்தது மற்றும் மாநகராட்சி சாலையை அனுமதியின்றி சேதப்படுத்தியது உள்ளிட்ட குறைபாடுகள் கண்டறியப்பட்டது.
இதையடுத்து அந்த இணைப்பு புதன்கிழமை துண்டிக்கப்பட்டு, அந்த நிறுவனத்துக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.