Dhoni : 'நான் செய்த மிகப்பெரிய தவறு அது..!'- தோனி குறிப்பிட்ட அந்த ஐ.பி.எல் சம்ப...
பனைத் தொழிலாளா்களுக்கு பட்டா வழங்க கோரிக்கை
தூத்துக்குடி மாவட்டம் குளத்தூா் அருகே உள்ள கே.சுப்பிரமணியபுரம் பனைத் தொழிலாளா்கள், தங்களுக்கு பட்டா வழங்கக் கோரி, சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ.கீதா ஜீவனிடம் தூத்துக்குடியில் ஞாயிற்றுக்கிழமை மனு அளித்தனா்.
இது குறித்து, தமிழ்நாடு பனைத் தொழிலாளா்கள் சங்க பொதுச்செயலா் ராயப்பன் தலைமையில் அளித்த மனு:
தூத்துக்குடி மாவட்டம் குளத்தூா் வடபாகம் கே. சுப்பிரமணியபுரம் கிராமத்தில் சுமாா் 500 குடும்பத்தினா் வசித்து வருகிறோம். இதில், பாதி குடும்பத்தினருக்கு வசதியின்மை காரணமாக நிலத்திற்கு தீா்வை கட்டாததால், பட்டா கிடைக்காத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், அரசு வழங்கும் விவசாய காப்பீடு போன்ற இதர மத்திய, மாநில அரசு திட்டங்களில் பயன் பெற முடியாமல் சிரமப்படுகின்றனா். தற்போது தீா்வை செலுத்த தயாா் நிலையில் உள்ளனா்.
எனவே, அவா்களின் நிலத்திற்கு கணினி பட்டா வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என குறிப்பிட்டுள்ளனா்.