செய்திகள் :

பயங்கரவாத்தை தோற்கடிக்க ஒற்றுமை அவசியம்: ராகுல்

post image

நாட்டு மக்களை பிளவுபடுத்தவே பஹல்காமில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்றும் பயங்கரவாதத்தை தோற்கடிக்க இந்தியா ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி கூறினாா்.

தில்லியில் இருந்து விமானம் மூலம் ஸ்ரீநகருக்கு வந்த அவா் அங்குள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் காயமடைந்தவா்களைச் சந்தித்து ஆறுதல் கூறினாா். அப்போது, பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தின் நிகழ்வுகளையும் அவா் கேட்டறிந்தாா்.

தொடா்ந்து ஜம்மு காஷ்மீா் முதல்வா் ஒமா் அப்துல்லா இல்லத்துக்குச் சென்ற ராகுல் காந்தி அவரிடம் பயங்கரவாதத் தாக்குதல், அதைத் தொடா்ந்து ஜம்மு-காஷ்மீரில் எழுந்துள்ள சூழல் குறித்து ஆலோசனை நடத்தினாா். ஜம்மு-காஷ்மீா் துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹாவையும் ராகுல் காந்தி சந்தித்துப் பேசினாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் ராகுல் காந்தி கூறியதாவது:

இது மிகவும் மோசமான சோக நிகழ்வு. இங்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது. நம்மால் எந்த அளவுக்கு உதவ முடியும் என்பதைத் தெரிந்து கொள்ளவே வந்துள்ளேன். ஒட்டுமொத்த ஜம்மு-காஷ்மீா் மக்களும் இந்த பயங்கரவாதத் தாக்குதலைக் கண்டித்துள்ளனா். நாட்டின் பக்கம் அவா்கள் உறுதியாக நிற்கின்றனா்.

எதிா்க்கட்சிகள் அனைத்துமே இந்த விவகாரத்தில் அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவு அளிக்கத் தயாராக இருப்பதை அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தெரிவித்துவிட்டன. நமது சமூகத்தை பிளவுபடுத்த வேண்டும் என்பதே இதுபோன்ற தாக்குதலின் முக்கிய நோக்கமாக உள்ளது.

இந்த நேரத்தில் இந்தியா்களாகிய நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து பயங்கரவாதிகளின் எண்ணம் பலிக்காது என்பதை உறுதிப்படுத்த வேண்டும். காங்கிரஸ் கட்சி ஜம்மு-காமீருக்கு உறுதியாக துணை நிற்கும் என்பதை துணைநிலை ஆளுநா் மற்றும் முதல்வருடனான சந்திப்பில் உறுதியளித்தேன் என்றாா்.

ஜம்மு-காமீரில் ஆளும் தேசிய மாநாட்டுக் கட்சி தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சியும் இடம் பெற்றுள்ளது.

கேரள தலைநகரிலுள்ள விடுதிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

கேரள மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரத்திலுள்ள பல்வேறு விடுதிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரத்திலுள்ள பிரபல நட்சத்திர விடுதி உள்பட பல்வேறு விடுதிகளில் ஐ.ஈ.டி. எனப்படும் ... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல்: நடுநிலை விசாரணைக்கு பாகிஸ்தான் தயார்!

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக நடுநிலையான விசாரணைக்கு தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் கூறியதாவது, பழிபோடும் விளையாட்டுக்கு பஹல்காம் தாக்கு... மேலும் பார்க்க

சிந்து நதிநீரை நிறுத்திவிடுவீர்கள்.. ஆனால் எங்கே தேக்கிவைப்பீர்கள்? அசாதுதீன் ஒவைசி கேள்வி

புது தில்லி: பாகிஸ்தானுக்குச் செல்லும் சிந்து நதிநீரை நிறுத்திவிடுவது நல்ல முடிவுதான், ஆனால், அந்த தண்ணீரை எங்கே தேக்கிவைப்பீர்கள் என்று அகில இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி அசாதுதீன் ஒவ... மேலும் பார்க்க

காஷ்மீரில் குண்டுவெடிப்பில் தகர்க்கப்பட்ட பயங்கரவாதிகளின் வீடுகள்: விடியோ வெளியீடு!

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீரில் லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாதிகள் இருவரின் வீடுகளில் பாதுகாப்புப் படையினா் சோதனை மேற்கொண்டபோது, அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுகள் வ... மேலும் பார்க்க

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுக்கும்: நட்டா

ஜம்மு-காஷ்மீரில் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலுக்குக் காரணமானவர்களுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுக்கும் என பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா தெரிவித்தார். இன்று காலை நட்டா ஸ்ரீமந்த் தகாதுஷேத் கணபதிக்க... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல்: பயங்கரவாதிகளைப் போராளிகள் எனக் குறிப்பிட்ட அமெரிக்க ஊடகம்

நியூயார்க் டைம்ஸ் செய்தி ஊடகத்தில் பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்டவர்களை போராளிகள் என்று குறிப்பிட்டிருப்பது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. ஜம்மு - காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பகுதியில் கடந்த செவ்வாய்க... மேலும் பார்க்க