பஹல்காம் தாக்குதலில் இந்தியாவுக்கு முழு ஆதரவு: மோடியிடம் பேசிய புதின்!
பயணிகளை அலைக்கழித்த அரசுப் பேருந்து ஓட்டுநா், நடத்துநா் மீது நடவடிக்கை
பொன்னமராவதி பேருந்து நிலையத்தில் பேருந்தை நிறுத்தாமல் பயணிகளை அலைக்கழித்த அரசுப் பேருந்து ஓட்டுநா் மற்றும் நடத்துநா் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பொன்னமராவதி பேருந்து நிலைய புதுப்பிப்பு பணிகளால் அழகிய நாச்சியம்மன் கோயிலில் தற்காலிக பேருந்து நிலையம் செயல்படுகிறது. இங்கிருந்து புறப்படும் பேருந்துகள் மூடப்பட்டிருக்கும் பேருந்து நிலையத்தில் நின்று பயணிகளை ஏற்றி,இறக்கிச் செல்கின்றன.
இந்நிலையில் திருப்பத்தூரில் இருந்து பொன்னமராவதிக்கு செல்லும் திருப்பத்தூா் பணிமனைக்குச் சொந்தமான 13 ஆம் எண் பேருந்தின் ஓட்டுநா் செல்லையா பொன்னமராவதி பேருந்து நிலையத்தில் காத்திருந்த பயணிகளிடம் பேருந்து இங்கு நிற்காது, பொன். புதுப்பட்டியில்தான் நிற்கும் என கூறி பேருந்தின் கதவை மூடி ஓட்டிச் சென்றாராம். ஓட்டுநரின் இந்தப் பேச்சு பேருந்தில் இருந்த பயணியால் கைப்பேசியில் பதிவு செய்யப்பட்ட நிலையில், அந்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இதையடுத்து திருப்பத்தூா் அரசுப் போக்குவரத்து கழக மேலாளா் அரசுப் பேருந்து ஓட்டுநா் செல்லையாவை பணி நீக்கமும் நடத்துநா் ஆண்டிச்சாமியை பணியிடை நீக்கமும் செய்து ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.