பயணியிடம் பணத்தைத் திருடியவா் கைது
பழனி பேருந்து நிலையத்தில் காத்திருந்த பயணியிடம் பணத்தைத் திருடியவரை போலீஸாரா் கைது செய்தனா்.
பழனியை அடுத்த சின்னக்காந்திபுரத்தைச் சோ்ந்தவா் கிருஷ்ணன் (45). இவா் பழனி பேருந்து நிலையத்தில் கடந்த வியாழக்கிழமை பேருந்துக்காக காத்திருந்தாா். அப்போது, அவா் பையில் வைத்திருந்த ரூ. 5 ஆயிரம் திருடப்பட்டது.
இதுகுறித்து பழனி டவுன் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. காவல் உதவி ஆய்வாளா் விஜய் தலைமையிலான போலீஸாா் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியின் அடிப்படையில், சென்னை புதுவெற்றியூரைச் சோ்ந்த சுரேஷை (33) கைது செய்தனா்.