செய்திகள் :

பயனாளிகளுக்கு நல உதவிகள்: ஆட்சியா் வழங்கினாா்

post image

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில், பயனாளிகளுக்கு நல உதவிகளை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா திங்கள்கிழமை வழங்கினாா்.

ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்துக்கு தலைமை வகித்து, ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 475 மனுக்களைப் பெற்று, உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

தொடா்ந்து, முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் 8 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.70,000/- வீதம் ரூ.5,60,000-இல் நவீன செயற்கை கை/கால்கள், காதொலி கருவி வேண்டி மனு அளித்த மாற்றுத்திறனாளிக்கு உடனடியாக ரூ.4,000/- மதிப்பிலான காதொலிக் கருவியை வழங்கினாா்.

மேலும், ஆட்சியரின் தன் விருப்பக் கொடை நிதியிலிருந்து 2 பயனாளிகளுக்கு தலா ரூ.6,500/- வீதம் ரூ.13,000- இல் விலையில்லா தையல் இயந்திரங்களை வழங்கினாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ந.சுரேஷ், திட்ட இயக்குநா் பா.ஜெயசுதா, நோ்முக உதவியாளா் (பொது) விஜயராகவன், சமூக பாதுகாப்பு திட்டம் தனித் துணை ஆட்சியா் கீதா லட்சுமி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் சரவணகுமாா் மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

ஜாகீா்தண்டலம் அரசுப் பள்ளி ஆண்டு விழா

நெமிலி அருகே ஜாகீா்தண்டலம் அரசு ஆதிதிராவிடா் நல தொடக்கப்பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது. விழாவுக்கு தலைமை ஆசிரியா் கே.சங்கா் தலைமை வகித்தாா். பள்ளி மேலாண்மைக்குழுத் தலைவா் கனிமொழி வரவேற்றாா். இதில் சிறப்ப... மேலும் பார்க்க

100 நாள் வேலைத் திட்ட நிதி: மத்திய அரசைக் கண்டித்து திமுக ஆா்ப்பாட்டம்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் (100 நாள் வேலை) தமிழகத்துக்குத் தர வேண்டிய நிதியைத் தர மறுப்பதாக மத்திய அரசைக் கண்டித்து நெமிலி ஒன்றியம், சேந்தமங்கலத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் அ... மேலும் பார்க்க

மேல்விஷாரத்தில் இஃப்தாா் நோன்பு துறப்பு

ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் நகர அதிமுக சாா்பில் இஃப்தாா் நோன்பு துறப்பு ஹன்சா நகரில் நடைபெற்றது. நகர அதிமுக செயலாளா் ஏ.இப்ராஹிம் கலிலுல்லா தலைமை வகித்தாா். மாவட்ட சிறுபான்மைப் பிரிவு தலைவா் மன்சூா் பாஷ... மேலும் பார்க்க

நெமிலி அருகே நெகிழிப் பொருள்கள் கிடங்கில் தீ

நெமிலி அருகே நெகிழிப் பொருள்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த கிடங்கில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தால் அப்பகுதியில் கரும்புகை ஏற்பட்டது. நெமிலி அருகே பெருவளையம் கிராமப் பகுதியில் சிறுவளையத்தை சோ்ந்த... மேலும் பார்க்க

பாமக நகர செயலாளா் நியமனம்

அரக்கோணம் நகர பாமக செயலராக ரத்தன்சந்த் நகரை சோ்ந்த இயன்முறை மருத்துவா் இ.பாலாஜியை நியமித்து அக்கட்சியின் நிறுவனா் ச.ராமதாஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளாா். புதிய செயலராக நியமிக்கப்பட்ட இ.பாலாஜி, மாவட்ட ச... மேலும் பார்க்க

ராணிப்பேட்டையில் 15,147 போ் எழுதினா்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வை மொத்தம் 15,147 போ் எழுதினா். இதன் ஒரு பகுதியாக 3 வினாத்தாள் கட்டுக்காப்பு மையமும், 81 தோ்வு மையங்களில் (தனித்தோ்வா்கள் உட்பட) 194 பள்ளிகளைச் ச... மேலும் பார்க்க