செய்திகள் :

பயிர் காப்பீடு திட்டத்துக்கு கூடுதல் நிதி! அமைச்சரவை ஒப்புதல்

post image

புத்தாண்டின் முதல் நாளில் மத்திய அரசு சார்பில் எடுக்கப்பட்டுள்ள முக்கிய முடிவு விவசாயிகளுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று (ஜன. 1) நடைபெற்றது. இக்கூட்டத்தில் விவசாயிகளுக்கான பயிர் காப்பீடு திட்டத்துக்கு கூடுதல் நிதி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டம், மறுசீரமைக்கப்பட்ட வானிலை அடிப்படையிலான பயிர் காப்பீட்டுத் திட்டம் (RWBCIS) ஆகியவற்றில் சில அம்சங்களைத் திருத்தவும் புதிய அம்சங்களைச் சேர்க்கவும் மத்திய ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, இத்திட்டங்களுக்கு ரூ. 69,515.71 கோடி ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

காப்பீடு திட்டங்களில் தொழில்நுட்ப மேம்பாட்டிற்காக ரூ. 824.77 கோடிக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதனை மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் செளஹான் தெரிவித்தார்.

இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,

''விவசாயிகளின் நலனை மேம்படுத்துவதில் மத்திய அரசு முனைப்புடன் உள்ளது. நாட்டு மக்களுக்கு உணவளிக்கும் விவசாய சகோதர, சகோதரிகள் அனைவரையும் நினைத்து நாடு பெருமிதம் கொள்கிறது. 2025 - ஆம் ஆண்டின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் விவசாயிகளின் வளத்தை மேம்படுத்தும் பணிகளுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது" எனப் பதிவிட்டுள்ளார்.

எச்எம்பிவி வைரஸ் இந்தியாவுக்கு புதிதல்ல.. ஏற்கனவே இருக்கும் வைரஸ்தான்!

பெங்களூரு மற்றும் குஜராத்தில் எச்எம்பிவி வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கும் நிலையில், இந்த வைரஸ் எப்போதோ இந்தியாவில் பரவிவிட்டதாக கர்நாடக சுகாதாரத் துறை அமைச்சர் த... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் 9 ராணுவ வீரர்கள் வீர மரணம்!

சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சல்கள் நடத்திய தாக்குதலில் 9 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். பிஜாப்பூரின் தண்டேவாடாவில் கூட்டுப் பயிற்சியை முடித்துவிட்டுத் திரும்பியபோது, பாதுகாப்புப் படையினரின் வாகன... மேலும் பார்க்க

எச்எம்பிவி தொற்று: மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க கேஜரிவால் வலியுறுத்தல்!

சீனாவில் புதிதாக பரவிவரும் எச்எம்பிவி தொற்று மேலும் பரவாமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மத்திய அரசை ஆம் ஆத்மி கட்சியின் தலைவரான அரவிந்த் கேஜரிவால் வலியுறுத்தியுள்ளார். சீனாவில் மக்களை அச்சுறுத்தி ... மேலும் பார்க்க

பங்குச் சந்தைகள் சரிவுக்கு எச்எம்பிவி வைரஸ் பாதிப்பு காரணமா?

மனிதர்களை பாதிக்கும் மெடாநியூமோவைரஸ் எனப்படும் எச்எம்பிவி வைரஸ், கர்நாடக மாநிலத்தில் இரண்டு பேருக்கும், குஜராத்தில் ஒருவருக்கும் பாதிக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு வெளியிட்ட சில நிமிடங்களில், இந்தியப்... மேலும் பார்க்க

தில்லியில் பெண்களுக்கு மாதம் ரூ.2,500: இது காங்கிரஸின் வாக்குறுதி!

தில்லியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2,500 உதவித்தொகை வழங்குவதற்காக பியாரி திதி யோஜனா திட்டத்தை அறிவித்துள்ளது. தலைநகர் தில்லியில் அடுத்த மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெ... மேலும் பார்க்க

எச்எம்பிவி வைரஸ் பாதிப்புக்கும் சீனாவுக்கும் தொடர்பில்லையா? சுகாதாரத் துறை

சீனாவில், மனிதர்களைத் தாக்கும் மெடாநியூமோவைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதாகத் தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், இந்தியாவில் இரண்டு குழந்தைகளுக்கு இந்த எச்எம்பிவி வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட... மேலும் பார்க்க