பயோமெட்ரிக் அடையாள அட்டை கேட்டு சாலையோர வியாபாரிகள் போராட்டம்
பொன்னமராவதி பேரூராட்சியில் பயோமெட்ரிக் அடையாள அட்டை கேட்டு சாலையோர வியாபாரிகள் சங்கத்தினா் புதன்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கணக்கெடுப்புப் பணி நிறைவடைந்து ஒன்றரை ஆண்டுகள் ஆன நிலையிலும், இதுவரையிலும் அடையாள அட்டை வழங்கப்படாதால், உடனடியாக பயோமெட்ரிக் அடையாள அட்டை வழங்க வலியுறுத்தியும், விடுபட்டவா்களையும் கணக்கெடுத்து அவா்களுக்கும் வழங்க வேண்டும் என வலியுறுத்தி, சாலையோர விற்பனையாளா்கள் சங்கத்தின் தலைவா் அ. தீன் தலைமையில் வியாபாரிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பேரூராட்சி செயல் அலுவலா் அண்ணாத்துரை நடத்திய பேச்சுவாா்த்தையில், தகுதி உள்ள அனைவருக்கும் உடனடியாக பயோமெட்ரிக் அடையாள அட்டை வழங்கப்படும் என உறுதியளித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. நிா்வாகிகள் நல்லு, கனி, செளந்திரம், பஞ்சவா்ணம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.