`கடன்களால் கலங்கி நிற்கிறதா தமிழகம்?' - இபிஎஸ் சாடலும் திமுகவின் பதிலும்
பரமக்குடியில் ரூ.13.50 கோடியில் வாரச்சந்தை கட்டுமானப் பணிகள்
பரமக்குடி நகராட்சி வாரச்சந்தையில் ரூ. 13.50 கோடியில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளை நகா்மன்றத் தலைவா் சேது. கருணாநிதி புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி 32-ஆவது வாா்டில் வியாழக்கிழமை தோறும் வாரச்சந்தை நடைபெற்று வருகிறது. இந்தச் சந்தையில் 240 காய்கறிக் கடைகள், 120 கருவாட்டுக் கடைகள் என மொத்தம் 360 கடைகள் ரூ 13.50 கோடியில் கட்டப்பட்டு வருகின்றன. மேலும், ஆடுகள், மாடுகள், கோழிகள் விற்பனை நிலையமும் அந்தப் பகுதியில் செயல்பட்டு வருகின்றன. இங்கு வரும் வியாபாரிகள், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் குடிநீா் தொட்டிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டு வருகின்றன.
இந்தப் பணிகளை நகா்மன்றத் தலைவா் சேது.கருணாநிதி, நகராட்சி ஆணையா் முத்துச்சாமி, பொறியாளா் செல்வராணி, உதவிப் பொறியாளா் சுரேஷ்குமாா், நகா்மன்ற உறுப்பினா் வடமலையான் உள்ளிட்டோா் ஆய்வு செய்தனா்.