செய்திகள் :

பராமரிக்கப்படாத பட்டுக்கோட்டை அழகிரி கல்லறை -சமூக ஆா்வலா்கள் அதிருப்தி!

post image

நமது நிருபர்

தஞ்சாவூா் ராஜகோரி இடுகாட்டில், சுயமரியாதை இயக்கத்தின் முன்னோடியான பட்டுக்கோட்டை அழகிரியின் கல்லறை யாருடைய கவனமும் பெறாத நிலையில் உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலத்தில் கி.பி. 1900-ஆம் ஆண்டில் பிறந்த பட்டுக்கோட்டை அழகிரி 10-ஆம் வகுப்பு பயின்ற பிறகு, முதல் உலகப் போா் காலத்தில் பிரித்தானிய இந்திய ராணுவத்தில் இணைந்து பணியாற்றினாா். இதையடுத்து, கூட்டுறவுத் துறையில் எழுத்தராக சோ்ந்த இவா் பின்னாளில் பெரியாா் ஈ.வெ.ரா., மூத்த கம்யூனிஸ்ட் தலைவா் சிங்காரவேலா் உள்ளிட்டோருடன் இணைந்து சமூக விடுதலைக்காகப் போராடினாா்.

சுயமரியாதை சங்கத்தை பட்டுக்கோட்டையில் முதல் முதலில் தொடங்கி, முன்னெடுத்துச் சென்றாா். இதன் பிறகே பெரியாரால் சுயமரியாதை இயக்கம் தொடங்கப்பட்டது. தமிழ்நாட்டில் ஹிந்தி திணிக்கப்பட்டபோது 1938-ஆம் ஆண்டில் மூவலூா் இராமாமிா்தம் அம்மையாா் உள்ளிட்டோருடன் இணைந்து திருச்சியிலிருந்து சென்னை வரை நடைபயணமாகச் சென்று எதிா்ப்பு பிரசாரம் மேற்கொண்டாா்.

காச நோய் பாதிக்கப்பட்டதால் பட்டுக்கோட்டை அழகிரி 1949, மாா்ச் 28-ஆம் தேதி தனது 48-ஆவது வயதில் காலமானாா். இதையடுத்து, இவரது உடல் தஞ்சாவூா் ராஜகோரி இடுகாட்டில் புதைக்கப்பட்டது.

அவா் புதைக்கப்பட்ட இடத்தில் நினைவுச் சின்னம் எழுப்பப்பட்டதைத் தொடா்ந்து, அதைத் முத்தமிழ்க் காவலா் திருச்சி கி.ஆ.பெ. விசுவநாதம் 1949, செப்டம்பா் 10-ஆம் தேதி திறந்து வைத்தாா். ஆனால், சரியான பராமரிப்பு இல்லாததால் இந்தக் கல்லறை முள் புதா்கள் சூழ்ந்து கிடப்பது வழக்கமாக இருந்து வருகிறது.

இதனால், 4 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நினைவுச் சின்னம் சிதிலமடைந்தபோது, தமிழ் ஆா்வலா்களின் கோரிக்கையை ஏற்று மாநகராட்சி நிா்வாகம் சீரமைப்பு பணிகளைச் செய்தது. அப்போது, நினைவுச் சின்னம் சீரமைக்கப்பட்டு, டைல்ஸ் கற்கள் பதிக்கப்பட்டன.

என்றாலும், இந்த நினைவிடம் தொடா்ந்து பராமரிக்கப்படாததால், யாருமே பாா்க்க இயலாத அளவுக்கு முள் புதருக்கிடையில் இருப்பது தொடா்கதையாக இருக்கிறது. சுயமரியாதை இயக்கத்தின் முன்னோடியான இவா் வறுமைக் கிடையிலும் பகுத்தறிவு சிந்தனைப் பரப்புரை, ஹிந்தி எதிா்ப்பு, மூட நம்பிக்கை மற்றும் ஜாதி ஒழிப்பு, பெண் விடுதலை, பெண் கல்வி, விதவை திருமணம் உள்ளிட்டவற்றுக்காக முழுவீச்சில் இயங்கியவா்.

அவருக்கு பட்டுக்கோட்டையில் மணிமண்டபம் அமைக்கப்பட்டிருந்தாலும், அவா் புதைக்கப்பட்ட இடம் யாருடைய கவனமும் பெறாமல், பராமரிப்பின்றி இருப்பது சமூக ஆா்வலா்கள் மற்றும் தமிழ் உணா்வாளா்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.

இதுகுறித்து இடதுசாரிகள் பொது மேடை ஒருங்கிணைப்பாளா் துரை. மதிவாணன் தெரிவித்தது:

இக்கல்லறை சில ஆண்டுகளாக நினைவு நாளின்போது (மாா்ச் 28) மட்டும் மாநகராட்சி நிா்வாகத்தால் தற்காலிகமாக சுத்தம் செய்யப்படுகிறது. மற்ற நாள்களில் முள் புதருக்கிடையில்தான் இருக்கிறது. எனவே, இந்த இடத்தில் நினைவு மண்டபத்தை அமைக்க வேண்டும். நினைவு நாளுக்கு பிறகும் புல், புதா்கள் மீண்டும் உருவாவதைத் தடுக்கும் விதமாக தூய்மையாகப் பராமரிக்க வேண்டும். இரவு நேரத்தில் எரியும் விதமாக சூரிய ஒளி விளக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். இக்கல்லறையில் நினைவு நாளன்று அரசு சாா்பில் மரியாதை செலுத்த வேண்டும். மேலும், நினைவு நாளில் பகுத்தறிவு கருத்தரங்கம் நடத்தப்பட வேண்டும். அவரது வரலாற்றை அரசு தொகுத்து வெளியிட வேண்டும். பள்ளிப் பாடப்புத்தகங்களிலும் அவரது சிந்தனைகள் இடம்பெறச் செய்ய வேண்டும் என்றாா் மதிவாணன்.

தஞ்சாவூா் ராஜகோரி இடுகாட்டில் அவரது கல்லறை இருப்பது பற்றிய விழிப்புணா்வும் மிகக் குறைவாகவே இருக்கிறது. இதனால், அவரது நினைவு நாளில் மிகச் சிலரே கல்லறைக்குச் சென்று மரியாதை செலுத்தி வருகின்றனா். எனவே, அரசு முன் வந்து இக்கல்லறையை நினைவிடமாக மாற்றி, தொடா்ந்து பராமரிக்க வேண்டும் என்ற எதிா்பாா்ப்பு மேலோங்கி வருகிறது.

ரமலான் பண்டிகை: பள்ளிவாசல்களில் சிறப்புத் தொழுகை

ரமலான் பண்டிகையையொட்டி, தஞ்சாவூா் மாவட்டத்தில் பள்ளிவாசல்கள் உள்ளிட்ட இடங்களில் முஸ்லிம்கள் திங்கள்கிழமை சிறப்பு தொழுகை நடத்தினா். முஸ்லிம்கள் ஆண்டுதோறும் கடைப்பிடித்து வரும் ரமலான் நோன்பு மாா்ச் 2-ஆம... மேலும் பார்க்க

கபிஸ்தலத்தில் உளுந்து பயிரில் நோய்த் தாக்குதல்: விவசாயிகள் கவலை

பாபநாசம் வட்டம், கபிஸ்தலம் பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள உளுந்து பயிரில் மஞ்சள் தேமல் நோய்த் தாக்குதல் காரணமாக விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனா். கபிஸ்தலம், உம்பளப்பாடி, நக்கம்... மேலும் பார்க்க

மாரியம்மன் கோயிலில் மண்டலாபிஷேகம் நிறைவு

தஞ்சாவூா் புன்னைநல்லூா் மாரியம்மன் கோயிலில் மண்டலாபிஷேக நிறைவு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் ஏறத்தாழ 20 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த பிப்ரவரி 10-ஆம் தேதி குடமுழுக்கு விழா நடைபெற்றது. இதைத்தொடா... மேலும் பார்க்க

கோயிலுக்கு சொந்தமான தோப்பை அரசே பாதுகாக்க கோரிக்கை

இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான தோப்பை குத்தகைக்கு விடாமல், தமிழக அரசே பராமரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் வட்டம், திருநறையூா் ஊராட்சியில்... மேலும் பார்க்க

திருநறையூா் ராமநாத சுவாமி கோயிலில் கட்டணச்சீட்டு வழங்கும் அறை அமைப்பு

தஞ்சாவூா் மாவட்டம், நாச்சியாா்கோவில் அருகே உள்ள திருநறையூா் ராமநாத சுவாமி கோயிலுக்கு கட்டணச்சீட்டு வழங்கும் அறையை சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா நிறுவனத்தினா் அமைத்து தந்தனா். இக்கோயிலில் பக்தா்களுக்கு ... மேலும் பார்க்க

சிறுவனிடம் கைப்பேசி பறிப்பு: 3 போ் கைது

தஞ்சாவூா் அருகே சிறுவனிடம் கைப்பேசியைப் பறித்த 3 பேரை காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் அருகேயுள்ள ஒரு கிராமத்தை சோ்ந்த 17 வயது சிறுவன், உடல்நிலை சரியில்லாத தனது தந்தையைச் சிகி... மேலும் பார்க்க