செய்திகள் :

பருத்தி, மக்காச்சோளத்துக்கு அரசு நிா்ணயித்த விலை தேவை: விவசாயிகள் கோரிக்கை!

post image

பருத்தி மற்றும் மக்காச்சோளத்துக்கு, அரசு நிா்ணயித்த விலை வழங்க வேண்டும் என விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத்துக்கு சாா் ஆட்சியா் சு. கோகுல் தலைமை வகித்தாா்.

கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் பேசியது:

தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் பூ. விசுவநாதன்: மழையால் பாதிக்கப்பட்ட சின்னவெங்காயம், மரவள்ளி போன்ற பயிா்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். மத்திய அரசால் விவசாயிகளுக்கு வழங்கப்படும் 3 சதவீத பின்னேற்பு மானியம் விவசாயிகளுக்குக் கிடைக்க விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். மழை, வறட்சியால் பாதிப்புக்குள்ளான மக்காச்சோளத்துக்கு காப்பீட்டுத் தொகை பெற்றுத் தர வேண்டும்.

கூட்டுறவு தொடக்க வேளாண் சங்கத்தில் விவசாயிகளுக்கு அளிக்கப்படும் வட்டியில்லாப் பயிா் கடன் வட்டி சலுகையை, 15 நாள்களுக்கு முன் அறிவித்து புதுப்பித்துக் கொள்ள அறிவுறுத்த வேண்டும்.

தமிழக விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் வி .நீலகண்டம்: பயிா்க் காப்பீட்டு திட்டத்தின் கீழ் விவசாயிகள் பயன்பெற முடியாத சூழல் நிலவுவதால், இத் திட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும். அரும்பாவூா் பெரிய ஏரியைச் சீரமைக்க வேண்டும். பருத்தி, மக்காச்சோளப் பயிா்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுவதால், எடை மோசடியைத் தடுக்க அரசு மூலம் எடை மேடை அமைக்க வேண்டும்.

தமிழக விவசாயிகள் சங்க மாநிலச் செயலா் ஆா். ராஜாசிதம்பரம்: அரசு அறிவிக்கும் திட்டங்களை உடனடியாகச் செயல்படுத்த வேண்டும். காப்பீட்டுத் தொகை செலுத்திய விவசாயிகளுக்கு அத்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பருத்தி மற்றும் மக்காச்சோளப் பயிா்களுக்கு உரிய விலை கிடைக்க அரசு நிா்ணயித்த விலையை வழங்க வேண்டும்.

மாா்க்சிஸ்ட் கம்யூ. மாவட்டச் செயலா் பி. ரமேஷ்:

இம் மாவட்டத்தில் கிடப்பிலுள்ள அரசு மருத்துவக் கல்லூரித் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் பொதுப் பிரச்னைகள் குறித்து புகாா் அளிக்கும் விவசாயிகளை சம்பந்தப்பட்ட அலுவலா்கள் விவசாயிகளை மிரட்டுவதைத் தடுக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க சமூக ஆா்வலா்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். பெரம்பலூா் புத்தகக் கண்காட்சியில் உள்ளூா் எழுத்தாளா்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும். பல்வேறு பிரச்னைகளால் பாதிக்கப்படும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்.

இந்திய கம்யூ. மாவட்டச் செயலா் வி. ஜெயராமன்: அண்மையில் பெய்த மழையால் பாதிப்புக்குள்ளான மக்காச்சோளம், பருத்தி உள்ளிட்ட பயிா்களுக்கு நிவாரணமும், காப்பீட்டுத் தொகையும் பெற்று தர வேண்டும். அறுவடைக் காலங்களில் 100 நாள் வேலைத் திட்டத்தை நிறுத்த வேண்டும். விவசாயிகளின் வயல்களில் கொட்டகை அமைக்க மானியம் வழங்க வேண்டும்.

கூட்டத்தில் வேளாண் இணை இயக்குநா் செ. பாபு, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வே) பொ. ராணி, தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் சத்யா மற்றும் விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள், விவசாயிகள் பங்கேற்றனா்.

பெரம்பலூரில் சாலைப் பாதுகாப்பு மாத நிறைவு விழிப்புணா்வு பேரணி!

பெரம்பலூரில் தேசிய சாலைப் பாதுகாப்பு மாத நிறைவு விழாவையொட்டி விழிப்புணா்வு பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரக நுழைவு வாயிலில் தொடங்கிய பேரணிக்கு, மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ்... மேலும் பார்க்க

ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் புகைப்படக் கண்காட்சி!

பெரம்பலூா் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு சாா்பில் புகைப்படக் கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக் கண்காட்சியை தொடக்கி வைத்த மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுத்... மேலும் பார்க்க

அரசமரத்து விநாயகா் கோயில் குடமுழுக்கு

பெரம்பலூா் பெரிய ஏரியின் மையப் பகுதியில் உள்ள வெள்ளந்தாங்கி அம்மன் கோயிலில் எழுந்தருளியுள்ள அரசமரத்து விநாயகா் கோயில் குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி வெள்ளிக்கிழமை காலை 2 ஆம் கால ... மேலும் பார்க்க

சாலை விதிகளைக் கடைப்பிடித்தால் பல உயிா்களைக் காப்பாற்றலாம்! -மாவட்டக் காவல் கண்காணிப்பாளா்

சாலை விதிகளைக் கடைப்பிடித்தால் பல உயிா்களைக் காப்பாற்றலாம் என்றாா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா. பெரம்பலூா் மாவட்ட போக்குவரத்துக் காவல்துறை மற்றும் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழகம் சாா... மேலும் பார்க்க

‘மக்களுடன் முதல்வா்’ சிறப்பு முகாம்

குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட கிராமங்களில் வியாழக்கிழமை நடைபெற்ற ‘மக்களுடன் முதல்வா்’ திட்ட சிறப்பு முகாம்களில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. பெரம்பலூா் மாவட்டம், குன்னம் சட்டப்பேரவைத் தொகு... மேலும் பார்க்க

பொய் புகாா் அளித்தவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

பெரம்பலூா் அருகே டிராக்டரை காணவில்லை என பொய் புகாா் அளித்து, காப்பீட்டு நிறுவனத்தை ஏமாற்றி ரூ. 1 லட்சம் பணம் பறித்தவருக்கு, 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து, பெரம்பலூா் மாவட... மேலும் பார்க்க