செய்திகள் :

பருத்தி மீதான 11% இறக்குமதி வரி ரத்து! மத்திய அரசு

post image

பருத்தி மீதான 11 சதவிகித இறக்குமதி வரியை தற்காலிகமாக ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யும் பொருள்களுக்கு 25 சதவிகிதம் பரஸ்பர வரி விதிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, ரஷியாவுடனான கச்சா எண்ணெய் வர்த்தகத்தை காரணம் காட்டி, கூடுதலாக 25 சதவிகிதம் என இந்திய பொருள்களுக்கு மொத்தம் 50 சதவிகிதம் இறக்குமதி வரி விதித்தார் டிரம்ப்.

இந்த வரி விதிப்பால் இந்தியாவின் ஜவுளித்துறை ஏற்றுமதி கடுமையாக பாதிப்பை சந்தித்து வருகின்றது. இதனை ஈடு செய்யும் விதமாக இந்தியாவில் இறக்குமதி செய்யும் பருத்தி மீதான 11 சதவிகித வரியை ரத்து செய்யக் கோரி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இந்த நிலையில், ஆகஸ்ட் 19 முதல் செப்டம்பர் 30 வரை இந்தியாவில் இறக்குமதி செய்யும் பருத்தி மீதான வரியை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

ரஷியா - உக்ரைன் போரில் அமெரிக்காவின் அமைதிப் பேச்சுவார்த்தை முன்னேற்றம் அடைந்துள்ளது. இதனால், ரஷியாவை காரணம் காட்டி இந்தியாவுக்கு விதிக்கப்பட்ட 25 சதவிகிதம் கூடுதல் வரியை அமெரிக்கா விலக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The central government has announced the temporary abolition of the 11 percent import duty on cotton.

இதையும் படிக்க : பயணிகள் விமானத்தில் தீ! 36,000 அடி, 40 நிமிட பயணம்! பத்திரமாக தரையிறக்கியது எப்படி?

மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் ரஷியா பயணம்!

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், 3 நாள்கள் அரசு முறைப் பயணமாக இன்று (ஆக.19) ரஷியா செல்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷியா துணைப் பிரதமர் டெனிஸ் மண்டுரோவின் அழைப்பை ஏற்று, மத்திய வெளியுறவுத... மேலும் பார்க்க

இந்தியாவுக்கு அரிய தாதுக்கள், உரங்கள், சுரங்க இயந்திரங்கள் மீண்டும் ஏற்றுமதி: சீனா உறுதி!

இந்தியாவுக்கு அரிய தாதுக்கள், உரங்கள், சுரங்கம் துளையிடும் இயந்திரங்களை மீண்டும் ஏற்றுமதி செய்யப்ப்டும் என சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி உறுதியளித்துள்ளார்.சீன வெளியுறவு அமைச்சா் வாங் யி 2 நாள் பயணமா... மேலும் பார்க்க

ஜம்மு - காஷ்மீர் மேகவெடிப்பு: 6வது நாளில் பலி எண்ணிக்கை 64 ஆக அதிகரிப்பு!

ஜம்மு - காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில், மேகவெடிப்பினால் ஏற்பட்ட வெள்ளத்தில் பலியானோரது எண்ணிக்கை 64 ஆக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிஷ்த்வார் மாவட்டத்தில், கடந்த ஆக.14 ஆம் தேதி, மாலை... மேலும் பார்க்க

தே.ஜ. கூட்டணி எம்பிக்கள் கூட்டம்: பிரதமர் மோடி, சி.பி. ராதாகிருஷ்ணன் பங்கேற்பு!

தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்பிக்களின் கூட்டம் நாடாளுமன்ற நூலக கட்டடத்தில் தொடங்கிறது. இதில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா, குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கே... மேலும் பார்க்க

பழங்குடியினரின் 8 கோடி சதுர அடி நிலத்தை அதானிக்கு வழங்கிய அசாம் அரசு!

பழங்குடி சமூகத்தினருக்கு சொந்தமான 8.10 கோடி சதுர அடி நிலத்தை அதானியின் சிமெண்ட் ஆலைக்கு ஒதுக்கிய அசாம் அரசுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளார்.அசாம் மாநிலம் திமா ஹசாவோ மாவட்டத்தில் பழங்குடியி... மேலும் பார்க்க

தேர்தல் ஆணையர்கள் மீது நடவடிக்கை எடுப்போம்! ராகுல் எச்சரிக்கை

இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் வாக்குத் திருட்டில் ஈடுபட்ட மூன்று தேர்தல் ஆணையர்கள் மீதும் நடவடிக்கை எடுப்போம் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.வாக்குத்... மேலும் பார்க்க