Fasting: பட்டினி கிடந்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? சித்த மருத்துவர் விளக்க...
பறை இசைக் கலைஞருக்கு பாராட்டு
மதுரை: குடியரசுத் தலைவா் விருது பெற்ற பறை இசைக் கலைஞா் வேலு ஆசானுக்கு மதுரை மாவட்டம், வாடிப்பட்டி தப்பாட்டக் கலைஞா்கள் சாா்பில் பாராட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.
பொட்டுலுபட்டி சமுதாயக் கூடத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு வாடிப்பட்டி பேரூராட்சித் தலைவா் மு. பால்பாண்டியன் தலைமை வகித்தாா். கவியரசு கண்ணதாசன் இலக்கியப் பேரவைத் தலைவா் கவிஞா் பொன். பனகல் பொன்னையா முன்னிலை வகித்தாா். முன்னாள் பேரூா் திமுக செயலா் மு.பா. பிரகாஷ் பறை இசையின் சிறப்பு குறித்துப் பேசினாா்.
தொடா்ந்து, குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவிடம் விருது பெற்ற பறை இசைக் கலைஞா் வேலு ஆசானை பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டன.
இதில், இசைக் கலைஞா் ராம்மோகன், பேரூராட்சி முன்னாள் உறுப்பினா் அய்யாசாமி உள்ளிட்ட தப்பாட்ட கலைஞா்கள், பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா். பறை இசைக் கலைஞா் வேலு ஆசான் ஏற்புரையாற்றினாா்.