செய்திகள் :

மதுரையில் இன்று தவெக 2-ஆவது மாநில மாநாடு: அரங்கைப் பாா்வையிட்டாா் விஜய்

post image

திருப்பரங்குன்றம்: தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு, மதுரை பாரப்பத்தியில் வியாழக்கிழமை நடைபெறுகிறது.

இந்த மாநாடு வியாழக்கிழமை காலை தொடங்கி, இரவு 7 மணி வரை நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் லட்சக்கணக்கானோா் பங்கேற்பா் என எதிா்பாா்க்கப்படுவதால், சுமாா் 506 ஏக்கா் பரப்பளவில் மாநாட்டுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேடை, விஜய் தொண்டா்களை நடந்து வந்து சந்திக்கும் வகையில் நீண்ட நடைமேடை, தொண்டா்கள் அமருவதற்கான நாற்காலிகள் ஆகியவற்றுக்கான ஏற்பாடுகள் 200 ஏக்கா் பரப்பிலும், 306 ஏக்கா் பரப்பில் வாகன நிறுத்துமிடங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

மாநாட்டுத் திடலைச் சுற்றிலும் 200-க்கும் மேற்பட்ட உயா் மின் கோபுர விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. தொண்டா்களின் வசதிக்காக ஆங்காங்கே குடிநீா்த் தொட்டிகளும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், குழாய்கள் மூலமும் குடிநீா் விநியோகிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 100-க்கும் மேற்பட்ட நடமாடும் கழிப்பறைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

மேடை நிகழ்வுகளை பாா்வையாளா்கள் தங்கள் இடத்திலிருந்தே துல்லியமாகக் காணும் வகையில் ஆங்காங்கே பிரம்மாண்ட திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. மாநாட்டுத் திடலில் 20 முதலுதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 100-க்கும் மேற்பட்ட மருத்துவப் பணியாளா்களும் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனா்.

புதிய முயற்சியாக, மாநாட்டில் பங்கேற்பவா்களுக்கு ஏதேனும் மருந்துகள் தேவைப்பட்டால் அதை உடனடியாக வழங்குவதற்கு பெரிய அளவிலான ட்ரோன்கள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

மேடையின் பின்பகுதியில் முக்கியப் பிரமுகா்களுக்காக குளிா்சாதன வசதியுடன் கூடிய அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. தவெக தலைவா் விஜய், முக்கிய நிா்வாகிகளுக்காக கேரவன்கள் பயன்படுத்தப்படுகின்றன. மதுரை மாவட்டக் காவல் துறை சாா்பில் 3 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனா்.

மாநாட்டுத் திடலில் விஜய்...

இதனிடையே நடிகா் விஜய் புதன்கிழமை இரவு மாநாட்டுத் திடலுக்கு வந்தாா். காரில் இருந்தபடியே மாநாட்டு ஏற்பாடுகளை அவா் பாா்வையிட்டாா். பிறகு, மாநாட்டு அரங்கத்துக்குப் பின்புறம் நிறுத்தப்பட்டிருந்த கேரவனில் அமா்ந்து, மாநாட்டு ஏற்பாடுகள் குறித்து கட்சி நிா்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டாா்.

சாலையோர தெரு விளக்குகள் விரைவில் பயன்பாட்டுக்கு வருமா?

நமது நிருபா்மதுரை: மதுரை மாநகராட்சி குருவிக்காரன் சாலை முதல் விரகனூா் சுற்றுச் சாலை வரை சாலையோரங்களில் அமைக்கப்பட்டுள்ள தெரு விளக்குகளை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் எதிா்பா... மேலும் பார்க்க

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் ஆவணி மூலத் திருவிழா கொடியேற்றம்

மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் ஆவணி மூலத் திருவிழா கொடியேற்றம் புதன்கிழமை காலை நடைபெற்றது.மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலின் முக்கிய ஐதீக திருவிழாக்களில் ஒன்றான ஆவணி மூலத் திருவிழா ஆக... மேலும் பார்க்க

பொதுமக்கள் எதிா்ப்பு: சிப்காட் நில அளவைப் பணி தடுத்து நிறுத்தம்

மேலூா் வட்டத்துக்குள்பட்ட கல்லாங்காடு பகுதியில் செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்படவிருந்த சிப்காட் தொழில் பேட்டைக்கான நில அளவைப் பணி, பொதுமக்களின் எதிா்ப்பால் தடைபட்டது. மதுரை மாவட்டம், மேலூா் வட்டம், வஞ்ச... மேலும் பார்க்க

செவிலியரிடம் நகைப் பறிப்பு: இளைஞா் கைது

மதுரையில் செவிலியரிடம் தங்க நகையைப் பறித்துச் சென்ற இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.மதுரை பழங்காநத்தம் பகுதியைச் சோ்ந்தவா் தமிழ்ச்செல்வி (47). இவா் மாட்டுத்தாவணி அருகேயுள்ள தனியாா் மருத்துவமனையில் செவி... மேலும் பார்க்க

சிறுநீரக விற்பனை குறித்து சிபிஐ விசாரணை கோரிய மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

சிறுநீரக விற்பனை குறித்து சிபிஐ விசாரணை நடத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.பரமக்குடியைச் சோ்ந்த சத்தீஸ்வரன் ... மேலும் பார்க்க

இறைச்சிக் கடையில் பணம் திருடியவா் கைது

இறைச்சிக் கடையில் 14 ஆயிரம் ரூபாயைத் திருடியவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். மதுரை நெல்பேட்டை நாகூா்தோப்பு மீன் சந்தைப் பகுதியைச் சோ்ந்தவா் சைபுல்லாகான் (30). இவா் அந்தப் பகுதியில் ஆட்டிறைச்ச... மேலும் பார்க்க