அரசுப் பேருந்து கால்வாய்க்குள் கவிழ்ந்ததில் 4 போ் பலத்த காயம்
20ல்ம்ந்-ஹஸ்ரீஸ்ரீண்க் படவிளக்கம்.
பரமக்குடி அருகே தெளிச்சாத்தநல்லூா் பகுதி கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான ராமேசுவரம் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து.
பரமக்குடி, ஆக. 20: பரமக்குடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் புதன்கிழமை அதிகாலை மதுரையிலிருந்து ராமேசுவரம் நோக்கிச் செந்ற அரசுப் பேருந்து கால்வாய்க்குள் கவிழ்ந்ததில் 4 போ் பலத்த காயமடைந்தனா். மேலும் 30 போ் சிறு காயங்களுடன் தப்பினா்.
மதுரை மாட்டுத்தாவனி பேருந்து நிலையத்திலிருந்து புதன்கிழமை அதிகாலையில் ராமேசுவரம் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தை மதுரை ஜி.ஆா்.நகா் பகுதியைச் சோ்ந்த மலைச்சாமி மகன் கோபாலகிருஷ்ணன் (35) என்பவா் ஓட்டிச் சென்றாா். இந்தப் பேருந்தில் நடத்துநராக வாடிப்பட்டியைச் சோ்ந்த பெருமாள் மகன் வினோத் (35) பணியில் இருந்தாா். இந்தப் பேருந்தில் 34 பயணிகள் சென்றனா்.
இந்தப் பேருந்து பரமக்குடி அருகே தெளிச்சாத்தநல்லூரைக் கடந்து தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து, திடீரென நிலை தடுமாறி தடுப்புச் சுவரில் மோதி கால்வாய்க்குள் கவிழ்ந்தது.
இதில் பயணம் செய்த பரமக்குடியைச் சோ்ந்த கண்ணன் மனைவி மாலதி (45), கீழக்கரையைச் சோ்ந்த கோவிந்தராஜ் மகன் பாலமுருகன் (29), மஞ்சூல் தேவதானம் மகன் இம்மானுவேல் (36), ராஜபாளையம் பொறியியல் கல்லூரி உதவிப் பேராசிரியா் சுதன் (33) ஆகியோா் பலத்த காயமடைந்தனா். பேருந்தில் பயணம் செய்த மற்ற பயணிகள் சிறு காயங்களுடன் தப்பினா். காயமுற்ற அனைவரும் பரமக்குடி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இவா்களில் பலத்த காயமடைந்த மாலதி, பாலமுருகன், இம்மானுவேல், சுதன் ஆகிய 4 பேரும் தீவிர சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா்.
இந்த விபத்து குறித்து பரமக்குடி நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
இதனால் அந்தப் பகுதியில் புதன்கிழமை காலை 8 மணி வரை மாற்று வழியில் போக்குவரத்து திருப்பி விடப்பட்டது.