பழனி மலைக் கோயிலில் ரோப்காா் சோவை மீண்டும் இயக்கம்
பழனி: வருடாந்திரப் பராமரிப்புப் பணிகள் நிறைவுற்று பழனி மலைக் கோயில் ரோப் காா் சேவை புதன்கிழமை மீண்டும் இயக்கப்பட்டது.
பழனி முருகன் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வந்து செல்கின்றனா். பக்தா்கள் மலைக் கோயிலுக்கு படிப்பாதை, மின் இழுவை ரயில், ரோப் காா் ஆகியவற்றில் சென்று வருகின்றனா்.
இதில் முதியோா்கள், மாற்றுத் திறனாளிகள் விரைவாகவும் எளிதாகவும் சென்றுவர ரோப் காா் பயன்பட்டு வருகிறது. ஆண்டு பராமரிப்புப் பணிக்காக கடந்த 35 நாள்களாக ரோப் காா் சேவை நிறுத்தப்பட்டது.
இதையடுத்து, இரும்பு வட கம்பிகள், பல் சக்கரங்கள், மின் மோட்டாா்கள் உள்ளிட்ட பாகங்கள் சோதனை செய்யப்பட்டு பழுதடைந்த பாகங்களை மாற்றும் பணிகள் நடைபெற்றன. இந்த நிலையில், பராமரிப்புப் பணிகள் நிறைவடைந்து புதன்கிழமை முதல் பக்தா்களின் பயன்பாட்டுக்கு ரோப் காா் சேவை கொண்டுவரப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பழனி கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் சுப்பிரமணி, இணை ஆணையா் மாரிமுத்து உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.