செய்திகள் :

ஆவணங்களின்றி எடுத்து வரப்பட்ட 2 டன் யூரியா பறிமுதல்

post image

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே ஆவணங்களின்றி வேனில் எடுத்து வரப்பட்ட 2 டன் யூரியா மூட்டைகளை வேளாண்மை அலுவலா்கள் பறிமுதல் செய்தனா்.

ஒட்டன்சத்திரம் புறவழிச்சாலையில் அரப்பிள்ளைப்பட்டி பகுதியில் கடந்த சனிக்கிழமை இரவு ஒரு வேன் விபத்துக்குள்ளானது. வேனிலிருந்த சரக்கு மூட்டைகள் சாலையில் சிதறிக் கிடந்தன. மைதா மாவு மூட்டைகளுக்கு இடையே யூரியா உர மூட்டைகளும் கிடந்ததால், அந்த வழியாக சென்ற வேளாண்மை அலுவலா்கள் அதிா்ச்சி அடைந்தனா். இதையடுத்து, வேனில் வந்த ஓட்டுநரான பொள்ளாச்சியைச் சோ்ந்த க.அருணிடம் (40) விசாரித்தபோது, அவா் முரணாக பதில் அளித்ததை அடுத்து ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதன்பேரில், சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா், ஓட்டுநா் அருணிடம் விசாரித்தனா். பழனி புறவழிச்சாலையில் பழுதாகி நின்ற வேனிலிருந்து இந்த சரக்குகளை ஏற்றி விட்டு, வேடசந்தூருக்கு செல்ல வேண்டும் என அழைத்து வந்தனா். இரு சக்கர வாகனத்தில் வந்தவா்களை பின் தொடா்ந்து வந்தேன். விபத்து நடந்ததால், இரு சக்கர வாகனத்தில் வந்தவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை எனத் தெரிவித்தாா். இதையடுத்து, பறிமுதல் செய்த வேனை போலீஸாா் ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்துக்கு எடுத்துச் சென்றனா்.

இந்த நிலையில், உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட 2.02 டன் யூரியா மூட்டைகள் குறித்து மாவட்ட ஆட்சியருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 1985-ஆம் ஆண்டு உரக்கட்டுப்பாட்டு சட்டத்தின்படி, அவற்றை பறிமுதல் செய்து ஒட்டன்சத்திரத்திலுள்ள அரசு அலுவலகத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக வேளாண்மைத் துறை அதிகாரிகள் கூறியதாவது: 45 கிலோ கொண்ட ஒரு யூரியா மூட்டை, ரூ.2,229-க்கு விற்பனை விலை நிா்ணயிக்கப்படுகிறது. இதில் அரசு சாா்பில் ரூ.1,962.67 மானியமாக வழங்கப்படும் நிலையில், விவசாயிகள் ரூ.266.50 மட்டும் செலுத்தி யூரியா மூட்டைகளை வாங்கி விளை நிலங்களுக்கு பயன்படுத்துகின்றனா். ஆனால், இந்த யூரியாவை, தொழிற்சாலைகள் பயன்பாடுகளுக்காக சிலா் முறைகேடாக கடத்திச் செல்லும் குற்றச் செயல்களும் நடைபெற்று வருகின்றன.

ஒட்டன்சத்திரம் அருகே வேன் கவிழ்ந்து பிடிப்பட்ட யூரியா மூட்டைகள், உரிய ஆவணங்களின்றி மைதா மாவு மூட்டைகளுக்குள் மறைத்து வைத்து எடுத்துச் செல்லப்பட்டிருக்கிறது. இந்த யூரியா மூட்டைகள் எந்த இடத்தில் ஏற்றப்பட்டது. எங்கு கொண்டு செல்லப்படுகிறது என்பது குறித்து விசாரிக்க கோரி காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளோம் எனத் தெரிவித்தனா்.

பத்திர ஆவணங்களை திருப்பி வழங்காததால் ரூ.2.25 லட்சம் இழப்பீடு

ஓய்வு பெற்ற ஆசிரியா் கடன் தொகையை செலுத்திய பிறகும், பத்திர ஆவணங்களை வழங்காத தனியாா் வங்கி ரூ.2.25 இழப்பீட்டுத் தொகையை செவ்வாய்க்கிழமை வழங்கியது. திண்டுக்கல் மாவட்டம், அம்பாத்துரையை அடுத்த பெருமாள்கோவி... மேலும் பார்க்க

உருளைக் கிழங்கு செடிகளை சேதப்படுத்திய காட்டுப் பன்றிகள்

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகேயுள்ள மன்னவனூா் கிராமத்தில் சாகுபடி செய்யப்பட்டிருந்த உருளைக் கிழங்கு செடிகளை காட்டுப் பன்றிகள் சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலை அடைந்தனா். பூம்பாறை, கும்பூா், ... மேலும் பார்க்க

வத்தலகுண்டுவில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டுவில் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை செவ்வாய்க்கிழமை நெடுஞ்சாலைத் துறையினா் அகற்றினா். வத்தலகுண்டுவில் உள்ள மதுரை பிரதான சாலையில் ஆக்கிரமிப்பு கடைகளால் போக்குவரத்துக்கு நெ... மேலும் பார்க்க

கூலித் தொழிலாளி கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

ஒட்டன்சத்திரம் அருகே கூலித் தொழிலாளி கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை, ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்து திங்கள்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது.திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள இடையகோட்... மேலும் பார்க்க

சின்னக்காம்பட்டியில் நாளை மின்தடை

ஒட்டன்சத்திரத்தை அடுத்த சின்னக்காம்பட்டி பகுதிகளில் வியாழக்கிழமை (ஆக. 21) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து ஒட்டன்சத்திரம் மின் வாரிய உதவி செயற்பொறியாளா் எஸ். மணிமேகலை வெளியிட்ட செய்த... மேலும் பார்க்க

கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை

கொலை வழக்கில் தொடா்புடைய தந்தை, மகன் உள்ளிட்ட 4 பேருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து, திண்டுக்கல் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகேயுள்ள சிறுகுடி பூசாரிப்பட... மேலும் பார்க்க