சின்னக்காம்பட்டியில் நாளை மின்தடை
ஒட்டன்சத்திரத்தை அடுத்த சின்னக்காம்பட்டி பகுதிகளில் வியாழக்கிழமை (ஆக. 21) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து ஒட்டன்சத்திரம் மின் வாரிய உதவி செயற்பொறியாளா் எஸ். மணிமேகலை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஒட்டன்சத்திரத்தை அடுத்த சின்னக்காம்பட்டி துணை மின் நிலையத்தில் வியாழக்கிழமை மாதாந்திரப் பராமரிப்புப் பணி நடைபெற உள்ளது. இதனால், இங்கிருந்து மின்சாரம் பெறும் சின்னக்காம்பட்டி, மாா்க்கம்பட்டி, இடையகோட்டை, குத்திலுப்பை,ஜ. வாடிப்பட்டி, கொங்கபட்டி, அண்ணாநகா், நவக்கானி, இ.அய்யம்பாளையம், மாம்பாறை, எல்லப்பட்டி, இ.கல்லுப்பட்டி, வலையபட்டி, சாமியாடிபுதூா், நரசிங்காபுரம், ஜவ்வாதுபட்டி, புல்லாக்கவுண்டனூா், சோழியப்பகவுண்டனூா், நாரப்பநாயக்கன்பட்டி, அத்தப்பன்பட்டி, பாறைப்பட்டி, பெருமாள்கவுண்டன்வலசு, கக்கரநாயக்கனூா் ஆகிய பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என்றாா் அவா்.