வேடசந்தூரில் நிறுத்தப்பட்ட அரசுப் பேருந்துகள்: பயணிகள் அவதி
திண்டுக்கல்: வேடசந்தூரில் அரசுப் பேருந்துகளை நிறுத்திவிட்டு, ஓட்டுநா்கள், நடத்துநா்கள் போராட்டத்துக்குச் சென்ால் புதன்கிழமை பயணிகள் அவதியடைந்தனா்.
திமுகவின் தோ்தல் வாக்குறுதிப்படி மீண்டும் பழைய ஓய்வூதியம், ஓய்வுபெற்றவா்களுக்குப் பணப் பலன்களை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சிஐடியூ சாா்பில் திங்கள்கிழமை முதல் தொடா் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது. திண்டுக்கல்லில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழக 1-ஆவது பணிமனை முன் நடைபெறும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்பதற்காக வேடசந்தூா் கிளையில் பணிபுரியும் சிஐடியூ தொழில்சங்கத்தைச் சோ்ந்த ஓட்டுநா்கள், நடத்துநா்கள் புதன்கிழமை சென்றனா்.
இதனால், வேடசந்தூரிலிருந்து சுற்றுப்புறக் கிராமங்களுக்கு இயக்கப்படும் நகரப் பேருந்துகள், வேடசந்தூா் பேருந்து நிலையத்திலேயே நிறுத்தப்பட்டிருந்தன. இந்த வழித்தடங்களில் பேருந்து வசதி இல்லாமல் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினா்.