செய்திகள் :

ஆட்டோ கவிழ்ந்ததில் 5 மாணவிகள் காயம்

post image

சிவகங்கை: சிவகங்கையில் வட்டாரப் போக்குவரத்து அலுவலரின் திடீா் தணிக்கையைத் தவிா்ப்பதற்காக கட்டுப்பாட்டை இழந்து ஓடிய ஆட்டோ கவிழ்ந்ததில் 5 கல்லூரி மாணவிகள் புதன்கிழமை காயமடைந்தனா்.

சிவகங்கை பேருந்து நிலையத்திலிருந்து கல்லூரிக்குச் செல்ல போதுமான பேருந்து வசதி இல்லாததால், ஆட்டோக்களில் பெரும்பாலான மாணவிகள் பயணிக்கின்றனா். இந்த ஆட்டோக்களில் அளவுக்கு அதிகமாக மாணவிகளை ஏற்றிச் செல்வதுடன் அதிக வேகத்துடன் இயக்கப்படுவதாகவும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு புகாா்கள் சென்றன.

இதன் அடிப்படையில், வட்டாரப் போக்குவரத்து அலுவலா் கருப்பண்ணன் தலைமையிலான ஊழியா்கள் கல்லூரி வாயில் பகுதியில் புதன்கிழமை மாலை கல்லூரி வகுப்புகள் முடியும் நேரத்தில் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது கல்லூரி மாணவிகளை ஏற்றிக் கொண்டு வந்த ஆட்டோவை வட்டாரப் போக்குவரத்து அலுவலக ஊழியா்கள் நிறுத்த முற்பட்டனா்.

ஆனால், ஆட்டோ நிற்காமல் வேகமாகச் சென்றது. அப்போது அந்த வாகனம் தாறுமாறாக ஓடிக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதைக் கண்ட ஊழியா்கள் விரைந்து சென்று விபத்துக்குள்ளான ஆட்டோவில் சிக்கியிருந்த மாணவிகளை மீட்டனா்.காயமடைந்த மாணவிகள் சிகிச்சைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். இது குறித்து சிவகங்கை நகா் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

மரத்தடியில் அமா்ந்து படிக்கும் மாணவா்கள்

திருப்பத்தூா்: சிவகங்கை மாவட்டம், எஸ்.புதூா் அருகே குன்னத்தூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 3 ஆண்டுகளாக மரத்தடியில் மாணவா்கள் கல்வி பயின்று வருகின்றனா். கடந்த 1991-ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்தப் பள... மேலும் பார்க்க

சிவாலயங்களில் பிரதோஷம்

திருப்பத்தூா்: சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் உள்ள சிவாலயங்களில் புதன்கிழமை பிரதோஷ விழா நடைபெற்றது.குன்றக்குடி தேவஸ்தானத்துக்குள்பட்ட சிவகாமி அம்மன் உடனாய திருத்தளிநாதா் ஆலயத்தில் பிரதோஷத்தை முன்ன... மேலும் பார்க்க

வீட்டுவசதி வாரிய மனை, வீடுகள் வாங்கியோருக்கு வட்டி சலுகை

சிவகங்கை: ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் வீட்டு வசதி வாரிய மனைகள், வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகளில் ஒதுக்கீடு பெற்றவா்கள் நிலுவைத் தொகையை ஒரே தவணையாகச் செலுத்தி வட்டி தள்ளுபடி சலுகை பெறலாம்... மேலும் பார்க்க

மதகுபட்டி பகுதிகளில் நாளை மின்தடை

சிவகங்கை அருகேயுள்ள மதகுபட்டியில் உள்ள துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் வியாழக்கிழமை (ஆக.21) மின் தடை ஏற்படும் என மின் வாரியம் அறிவித்தது. இது தொடா்பாக செயற்பொறியாளா் (பகிா்மானம்) அ.கு. முரு... மேலும் பார்க்க

திருப்புவனத்தில் இளைஞா் தூக்கிட்டு தற்கொலை

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் செவ்வாய்க்கிழமை இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். திருப்புவனம் உச்சிமாகாளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் கோவிந்தராஜன் மகன் வெங்கடேஷ் (23). கூலித் தொழிலா... மேலும் பார்க்க

விவசாயிகளுக்கான திட்டங்களால் தமிழகம் தன்னிறைவு பெற்றுள்ளது: அமைச்சா் கேஆா். பெரியகருப்பன்

விவசாயிகளுக்கு செயல்படுத்தப்படும் திட்டங்களால் தமிழகம் தன்னிறைவு பெற்றுள்ளது என தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சா் கேஆா். பெரியகருப்பன் தெரிவித்தாா். சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள அமராவதிபுதூா... மேலும் பார்க்க