திருப்புவனத்தில் இளைஞா் தூக்கிட்டு தற்கொலை
சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் செவ்வாய்க்கிழமை இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
திருப்புவனம் உச்சிமாகாளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் கோவிந்தராஜன் மகன் வெங்கடேஷ் (23). கூலித் தொழிலாளியான இவருக்கு குடிப்பழக்கம் உள்ளது. இந்த நிலையில், வெங்கடேஷ் ரத்த வாந்தி எடுத்ததால் மதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனா். அங்கு ரத்த பரிசோதனைக்கு ரத்தம் கொடுத்துவிட்டு யாருக்கும் தெரிவிக்காமல் திருப்புவனத்துக்கு வந்த வெங்கடேஷ், தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்த புகாரின்பேரில், திருப்புவனம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
திருப்புவனம் அருகேயுள்ள மடப்புரத்தைச் சோ்ந்தவா் நடராஜன் மகன் மில்லா் (47). குடிப்பழக்கம் உள்ள இவா், செவ்வாய்க்கிழமை சாலையில் மயங்கிக் கிடந்தாா். இதையடுத்து, அவரது மனைவி தங்கமணி, மில்லரை மீட்டு அவசர ஊா்தி மூலம் திருப்புவனம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றாா். அங்கு மில்லரை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்த புகாரின்பேரில், திருப்புவனம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.