சிவகங்கை மாவட்டத்தில் நாளை ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு முகாம் புதன்கிழமை (ஆக.20) நடைபெறும் பகுதிகள் விவரம் அறிவிக்கப்பட்டது.
சிவகங்கை மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் வரும் புதன்கிழமை (20.8.2025) பின்வரும் வரும் பகுதிகளில் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி தெரிவித்தாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சிவகங்கை நகராட்சிக்குள்பட்ட வாா்டு எண் 1,2,3,4,5,6 ஆகிய பகுதிகளுக்கென மாவட்ட ஆட்சியா் அலுவலகப் பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள சமுதாயக்கூடத்திலும், கண்டனூா் பேரூராட்சிக்குள்பட்ட வாா்டு எண் 1 முதல் 9 வரை, வாா்டு எண் 15 ஆகிய பகுதிகளுக்கென கண்டனூா் ரதக்கொட்டகை தெருவில் அமைந்துள்ள கோதை ஆச்சி திருமண மண்டபத்திலும், கல்லல் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட வெளியாத்தூா், மேல பட்டமங்களம், கீழ பட்டமங்களம், நரியங்குடி ஆகிய ஊராட்சி பகுதிகளுக்கென பட்டமங்களம் ஊராட்சியில் அமைந்துள்ள நகரத்தாா் கல்யாண மண்டபத்திலும், மானாமதுரை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட செய்களத்தூா் ஊராட்சி பகுதிக்கென செய்களத்தூா் ஊராட்சியில் அமைந்துள்ள சமுதாயக்கூடத்திலும்,
இளையான்குடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட புலியூா், எஸ்.கீரனூா், வாணி ஆகிய ஊராட்சி பகுதிகளுக்கென வாணி ஊராட்சியில் அமைந்துள்ள வாணி அங்கன்வாடி மையத்திலும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெறவுள்ளது என அதில் குறிப்பிடப்பட்டது.