ஜம்மு - காஷ்மீர் மேகவெடிப்பு: 6வது நாளில் பலி எண்ணிக்கை 64 ஆக அதிகரிப்பு!
நியாய விலைக் கடை அமைக்க வலியுறுத்தல்
மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், இளையான்குடி ஒன்றியம், இடையவலசையில் நியாய விலைக் கடை அமைக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தினா்.
இந்தக் கிராமத்தில் 274 குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இவா்கள் அருகேயுள்ள கொங்கம்பட்டி கிராமத்துக்குச் சென்று ஒவ்வொரு மாதமும் ரேஷன் பொருள்களை வாங்கி வருகின்றனா். இடையவலசையில் தனி நியாய விலைக் கடை அமைத்து தரவேண்டும் என கிராம மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வலியுறுத்தியும் எந்தப் பலனும் இல்லை.
இது குறித்து இந்தக் கிராம மக்கள் கூறுகையில், இடையவலசையில் ஏராளமானோா் விவசாய வேலைக்குச் செல்கின்றனா். இவா்கள் கொங்கம்பட்டி கிராமத்துக்குச் சென்று ரேஷன் பொருள்களை வாங்கி வர மிகவும் சிரமப்படுகின்றனா். மழைக் காலங்களில் கொங்கம்பட்டி கிராமத்துக்குச் செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே, இடையவலசை கிராமத்துக்கு தனியாக நியாய விலைக் கடை அமைத்துத் தர வேண்டும் என வலியுறுத்தி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பல முறை மனுக்கள் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, எங்கள் கிராமத்துக்கு பொதுமக்கள் நலன் கருதி தனியாக நியாய விலைக் கடை அமைத்துத் தர வேண்டும் என்றனா்.